காவிரி: மன்றத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
டெல்லி:
தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் காவிரிப் பாசனப் பகுதிகளைப் பார்வையிட நடுவர் மன்றநீதிபதிகள் இருவருக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.
அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் இறுதித் தீர்ப்பை பின்னர் அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் தலைவராக நீதிபதி என்.பி. சிங்கின் உள்ளார். மன்றத்தின்உறுப்பினர்களாக நீதிபதிகள் என்.எஸ்.ராவ், சுதீர் நாராயணன் ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த மாதம் 23ம் தேதி முதல் தமிழக காவிரிப் பாசன பகுதிகளைபார்வையிடப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால், இதை நடுவர் மன்றத் தலைவர் சிங்தடுத்ததாகத் தெரிகிறது.
அதையும் மீறி அவர்கள் காவிரிப் படுகைப் பகுதிகளுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
இந் நிலையில் நடுவர் மன்றத் தலைவரையும் மீறி உறுப்பினர்கள் இருவரும் பாசனப் பகுதிகளைப்பார்வையிடவுள்ளதாகவும், அதைத் தடுக்குமாறும் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த காந்திசாகித்ய சங்கம் என்ற அமைப்பு வழக்குத் தொடர்ந்தது.
இதையடுத்து அவர்களது ஆய்வுப் பயணத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
மன்ற உறுப்பினர்கள் இருவரும் தமிழக, கர்நாடகப் பாசனப் பகுதிகள், அணைகளை பார்வையிட்டபின் விரைவில் இறுதித் தீர்ப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தத் தடைவிதிக்கப்பட்டது.
இந் நிலையில் காந்தி சாகித்ய சங்கத்தின் மனு இன்று நீதிபதிகள் ருமா பால், அருண் குமார் ஆகியோர்அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது காந்தி சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி,
நடுவர் மன்றத் தலைவரின் ஆட்சேபணையையும் மீறி உறுப்பினர்கள் இருவரும் காவிரிப் பாசனப்பகுதியில் ஆய்வு நடத்த முயல்வது தவறு. இந்த விஷயத்தில் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும்இடையே கடுமையான வார்த்தைப் போரும் நடந்துள்ளது என்றார்.
கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கி பேசுகையில்,
மன்ற உறுப்பினர்களின் இச் செயலால் அந்த நடுவர் மன்றத்தின் மீதான நம்பிக்கைகையே மக்கள்இழந்துவிட்டனர். இதனால் அதைக் கலைத்துவிட்டு புதிய மன்றத்தை அமைக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் வேணுகோபால்,
கர்நாடக அரசின் சார்பில் தான் காந்தி சாகித்ய சங்கம் மறைமுகமாக இந்த வழக்கைத் தாக்கல்செய்துள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு விரைவில் வந்துவிடக் கூடாது என்பதற்காகசெய்யப்படும் சதி இது. இதனால் இந்த வழக்கையே நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்என்றார்.
இதையடுத்துப் பேசிய நீதிபதிகள், நடுவர் மன்ற உறுப்பினர்கள் இருவரும் காவிரிப் பாசனப்பகுதிகளைப் பார்வையிட கடந்த மாதம் 20ம் தேதி விதிக்கப்பட்ட இடைக்காலத் தடைநீக்கப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை பின்னர் வழங்குகிறோம் என்று அறிவித்தனர்.
மன்றத்தின் உறுப்பினர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகக் கூறப்படுவதைபெரிதாக்கிய கர்நாடக அரசு, நடுவர் மன்றத்தையே கலைத்துவிட்டு புதிதாக ஒரு மன்றத்தைஅமைக்க வேண்டும் என்கிறது.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications