அரசின் பெயரை கெடுக்க வைகோ முயற்சி: ஜெ
சென்னை:
சென்னைக்குள் பாத யாத்திரை நடத்தி, போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தி, எனது அரசுக்குக் கெட்ட பெயர்வாங்கித் தரும் முயற்சிகளில் வைகோ ஈடுபட்டார் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
இன்று அதிகாலை 3.45 மணிக்கு இணை கமிஷ்னர் ஷைலேந்திர பாபு தலைமையிலான போலீஸ் டீம் தீவுத் திடலில்வைத்து வைகோவை கைது செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கைவெளியிட்டார்.
அதில் கூறப்பட்டிருந்ததாவது:
நடை பயணத்துக்கு அனுமதி இல்லை என்று போலீஸ் கூறிய பிறகும் பாத யாத்திரை நடத்தியே தீருவேன் என்றுஅறிவித்திருக்கிறார் வைகோ. அவரை போலீசார் அனுமதிக்க மாட்டார்கள்.
முக்கிய நகர்களில் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் நடை பயணம்நடத்த அனுமதிக் கூடாது என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. அதன் அடிப்படையில் தான் வைகோவுக்குஅனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதை அறிந்திருந்தும் தடையை மீறுவேன் என்று வீறாப்பு பேசியிருக்கிறார் வைகோ. சட்டத்ததுக்கும் நீதிக்கும்வைகோ பணிய மாட்டார் என்பது இதிலிருந்து புரிகிறது.
தடையை மீறி ஊர்வலம் நடத்தி, குழப்பம் ஏற்படுத்தி எனது அரசின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதேஅவரது ஒரே நோக்கம்.
கடந்த 41 நாட்களாக வைகோவின் நடை பயணத்துக்கு இந்த அரசு பாதுகாப்பும் கொடுத்தது. சட்டம், ஒழுங்குகெடாமல் காத்தது. இதை மக்கள் மறக்க மாட்டார்கள்.
வைகோ விஷயத்தில் சட்டப்படி அரசு செயல்படும். எதிர்க் கட்சிகள் என்னிடம் எதிரிக் கட்சிகள் மாதிரி நடப்பதுவழக்கமாகிவிட்டது என்று கூறியிருந்தார் ஜெயலலிதா.
அறிக்கை வந்த சில மணி நேரங்களில் வைகோ கைது செய்யப்பட்டிருந்தார்.
-
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications