ஜெ. சொத்து வழக்கு: சிறப்பு நீதிபதி பதவியேற்பு
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதிபச்சேபுரே பதவியேற்றுக் கொண்டார்.
வருமானத்தை மீறி முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் ரூ. 66 கோடி சொத்து சேர்த்தது குறித்துஇந்த நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது. இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்கள் கடந்த வாரம் பெங்களூர்கொண்டு வரப்பட்டுவிட்டன.
அவற்றை தமிழில் இருந்து கன்னடம், ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில்பெங்களூரைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளின் 20 தமிழ்ப் பேராசியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
2,600 ஆவணங்களில் உள்ள சுமார் 1 லட்சம் பக்கங்களை மொழி பெயர்கக வேண்டியுள்ளது. இந்தப் பணிமுடியவே 4 மாதமாகிவிடும் என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கை விசாரிக்கவுள்ள சிறப்பு நீதிமன்றம், பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ளகட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்றப் பதிவாளர் (விஜிலென்ஸ்)பச்சேபுரே நியமிக்கப்பட்டிருந்தார்.
அவர் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தமிழக அரசின் தரப்பில் வாதாட மூத்த கர்நாடக வழக்கறிஞர்எம்.வி.தேவராஜூ நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இவரை நியமனம் செய்வது குறித்து கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜெயினுடன் முதல்வர் தரம்சிங் ஏற்கனவே ஆலோசனை நடத்திவிட்டார்.
-
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications