கோபாலுக்கு ஆவணங்கள்: உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி:
நக்கீரன் கோபாலுக்கு பொடா ஆவணங்களை வழங்க உத்தரவிட்ட மறு ஆய்வுக் குழுவின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் கோபால் வழக்கை விசாரிக்கவும் அந்தக் குழுவுக்கு இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
கோபால் மீது போடப்பட்ட பொடா வழக்கில், அது தொடர்பான ஆவணங்களை அவருக்கு வழங்க வேண்டும் எனபொடா மறு ஆய்வுக் குழு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்தது. அந்த மனுவையும் இரு நீதிபதிகள்கொண்ட டிவிசன் பெஞ்ச் நிராகரித்து.
மேலும் புதன்கிழமை (நேற்று) பிற்பகல் 2 மணிக்குள் ஆவணங்களை கோபாலிடம் வழங்க உத்தரவிட்டது. இந்தஉத்தரவை எதிர்த்து நேற்று பிற்பகலில் அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி லகோத்தி தலைமையிலான டிவிசன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில்,
கோபால் மீது குற்றப் பத்திரிக்கையே தாக்கல் செய்யப்படவில்லை. இந் நிலையில் அவருக்கு எதிராக போலீசார்திரட்டிய ஆவணங்களை வழங்க வேண்டும் அவரிடம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை ஏற்க முடியாது.இதனால் விசாரணை பாதிக்கப்படும் என்றார்.
கோபாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அந்தியர்ஜூனா, இந்த ஆவணங்களைத் தந்தால் தான் எங்கள் தரப்புவாதங்களை முழுமையாக எடுத்து வைக்க முடியும், எந்த வகையான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனஎன்றே தெரியாமல் நாங்கள் எப்படி வாதிட முடியும் என்றார்.
இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதிகள், கோபால் வழக்கை விசாரிக்க பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு இடைக்காலத்தடை விதித்தனர்.
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும் முன்னரே வழக்குத் தொடர்பான ஆவணங்களைத் தரலாமா கூடாதா என்பதுமுக்கிய பிரச்சனையாக எழுந்துள்ளதால், அது குறித்து விரிவாக ஆராய வேண்டியுள்ளது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்டோபர் 1ம் தேதி நடக்கும். அதுவரை போலீஸ் ஆவணங்களைகோபாலிடம் தர வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கிறோம் என்று தீர்ப்பளித்தனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications