ஆப்பிரிக்காவுக்கு இந்தியாவின் தொழில்நுட்ப பரிசு
ஜோகனஸ்பர்க்:
53 ஆப்பிரிக்க நாடுகளையும் செயற்கைக் கோள் மற்றும் பைபர் ஆப்டிக் கேபிள் வழியாக ஒன்றிணைத்துத் தரஇந்தியா முன் வந்துள்ளது. இத் தகவலை ஜனாதிபதி அப்துல் கலாம் தென் ஆப்பிரிக்காவில் தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்காவில் 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கலாம் இன்று ஆப்பிரிக்க யூனியன் நாடுகளின்கூட்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
நேற்று எங்கள் நாட்டுப் பிரதமருடன் பேசினேன். இந்திய-ஆப்பிரிக்க உறவை வலுப்படுத்தும் வகையில் 50மில்லியன் டாலர் செலவில், 53 ஆப்பிரிக்க நாடுகளையும் செயற்கைக் கோள் மற்றும் பைபர் ஆப்டிக்ஸ் கேபிள்மூலமாக ஒன்றிணைத்துத் தருவது என்று அப்போது நாங்கள் முடிவு செய்தோம்.
இதன் மூலம் ஆப்பிரிக்காவின் 5 பல்கலைக்கழகங்கள், 53 கல்வி நிலையங்கள், 10 முக்கிய மருத்துவமனைகள்மற்றும் 53 சிறு மருத்துவமனைகள் இணைக்கப்படும். இதன் மூலம் கல்வி, மருத்துவ உதவி, ஆன்லைன் சேவைகள்ஆகியவற்றில் ஒரு ஆப்பிரிக்க நாட்டின் உதவியை இன்னொரு நாடு பெற முடியும்.
இதற்குத் தேவையான தொலைத் தொடர்பு டிரான்ஸ்பான்டர்களை இந்திய செயற்கைக் கோள்கள் வழங்கும்.
இந்தியாவின் ஒரு பில்லியன் மக்களின் சார்பில் ஆப்பிரிக்காவுக்கு இந்த சேவையைச் செய்து தருவதில் நான்அளவில்லாத மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் கலாம்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications