சேது திட்டம்: ஜெவுக்கு சம்பந்தமில்லை-கருணாநிதி
கோவை:
சேது சமுத்திரத் திட்டத்துக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என திமுக தலைவர்கருணாநிதி கூறினார்.
அண்ணா பிறந்த நாளையொட்டி கோவையில் நடந்த திமுக முப்பெரும் விழா பொதுக் கூட்டத்தில் கருணாநிதிபேசியதாவது:
கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தேன். அப்போதும் இதே இடத்தில் பேசினேன். அன்று கூடியகூட்டத்தை இன்றைய கூட்டம் வென்று காட்டிவிட்டது. சமீபத்தில் தான் சேலத்தில் மாநாடு நடத்தினோம், அடுத்துபக்கத்து மாவட்டமாக கோவையில் பொதுக் கூட்டம் போடுகிறோமே. வெற்றி பெறுமா என்று சங்கடப்பட்டேன்.என் சந்தேகத்தை உடைத்துத் தூளாக்கிவிட்டார்கள் திமுக தொண்டர்கள்.
திராவிட இயக்கம் எந்த சமுதாயத்துக்காகத் தோன்றியதோ, யாருக்காக பாடுபட்டதோ, அதை திராவிட மக்களிடம்கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். கிராமம், கிராமமாக செல்லுங்கள். திராவிட கொள்கைகளைப் பரப்புங்கள்.கிராமங்கள்தோறும் பெரியார், அண்ணாவின் சிந்தனைகள் பரவச் செய்யுங்கள்.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக சிலர் குறுக்கு சால் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். பவளப் பாறைக்கு பாதிப்பு,மீன் வளத்துக்கு பாதிப்பு என்கிறார்கள். இத் திட்டத்தை ஆதரிப்பது போல ஆதரித்து, மறைமுகமாக உள் வேலைபார்க்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது.
1999ம் ஆண்டில் மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது நதி நீர் தாவாக்களைத் தீர்க்கதேசிய நதி நீர்க் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் திமுகவலியுறுத்தியது. அதை அவர் ஒப்புக் கொண்டு கொள்கை வகுக்க குழுவை அமைத்தார்.
அதே போல தேசிய நதிகள் இணைப்பு, சேது சமுத்திரத் திட்டம் ஆகியவற்றுக்கும் அவரிடம் திமுக தான் ஒப்புதல்பெற்றது.
அதற்கு முன் பா.ஜ.க. கூட்டணியில் மதிமுக இருந்தபோது, சேது சமுத்திரத் திட்டத்துக்கு ஒப்புதல் கோரினார்வைகோ. ஆனால், தலையைத் தான் ஆட்டினார்களே தவிர, ஒப்புதலைத் தரவில்லை.
ஆனால், இப்போது மத்தியில் இருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான சர்க்கார், தமிழகக் கூட்டணிக் கட்சிகளின்கோரிக்கையை உடனே ஏற்று, சேது சமுத்திரத் திட்டத்துக்கு ரூ. 2,000 கோடியை ஒதுக்கியதோடு, இத் திட்டத்தைநிறைவேற்ற ஒரு கழகத்தையும் உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆக, சேது சமுத்திரத் திட்டமே தன்னால் தான் வந்தது என்று ஜெயலலிதா சொல்வது உண்மைக்குப் புறம்பானது.இந்தத் திட்டத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் துளியும் தொடர்பு கிடையாது. ஆனால், ஏதோ இவர் தான் வாஜ்பாயின்கையைப் பிடித்து திட்டத்துக்கு அனுமதி வாங்கியது போல பேசுகிறார். பா.ஜ.க. கூட்டணியில் ஜெயலலிதாஇருந்தபோது உருவாக்கப்பட்ட அஜென்டாவை தேடிப் பிடித்து வாங்கிப் பார்த்தேன்.
அதில் ஒரு வரி கூட சேது சமுத்திரத் திட்டம் பற்றி இல்லை. ஆனால், இன்று அவர் இந்தத் திட்டத்துக்குஜெயலலிதா உரிமை கொண்டாடுவதைப் பார்த்தால், இத் திட்டத்தை அவர் ஆதரிக்கிறார் என்று தான் நம்பவேண்டியுள்ளது. எங்கே, ஆதரிக்காமல் போய்விடுவாரோ என்று சந்தேகப்பட்டேன். ஆதரித்தவரை மகிழ்ச்சிதான்.
தமிழகத்துக்கு பொருளாதார செழிப்பைக் கொண்டு வரும் இத் திட்டத்தைக் கெடுக்கும் வகையில் யாரும்செயல்பட வேண்டாம் என்று எல்லோரையுமே கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். சேது சமுத்திரத் திட்டத்தால்பவளப் பாறைகள் பாதிக்கப்படும், மீன் வளம் குறையும் என்பதெல்லாம் பொய் பிரச்சாரம். இதைக் கேட்டுமீனவர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.
இத் திட்டத்துக்கு எங்கிருந்து எதிர்ப்பு கிளம்பினாலும் திமுக தொண்டர்கள் எதிர் பிரச்சாரத்தில் உடனேஇறங்குங்கள். கூட்டணிக் கட்சித் தொண்டர்களையும் உடன் சேர்த்துக் கொண்டு எந்திரமாக மாறி இத் திட்டதின்வெற்றிக்காக பாடுபடுங்கள். எல்லோரும் இணைந்து செந்தமிழ் நாடு செழிக்க வழி காண்போம் என்றார்கருணாநிதி.
முன்னதாக லியோனியின் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத் தலைப்பு வேறாக இருந்தாலும்பகவத்கீதையையும் திருக்குறளையும் ஒப்பிட்டுப் பலரும் பேசினர். கீதை மிகக் கடுமையாகவிமர்சனத்துக்குள்ளானது.












Click it and Unblock the Notifications