ஆந்திர அணைகளில் தமிழக அதிகாரிகள் ஆய்வு
சென்னை:
சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு கிடக்கும் நிலையில், ஆந்திராவின் கிருஷ்ணா நதியில்இருந்து மனிதாபிமான அடிப்படையில் நீரைத் திறந்துவிடுமாறு முதல்வர் ஜெயலலிதா விடுத்த கோரிக்கையை அம்மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி நிராகரித்துவிட்டார்.
இதையடுத்து கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி நீரைத் திறந்துவிட வேண்டும் என தமிழகம் கோரிக்கை விடுத்தது.இதற்கு பதில் அனுப்பிய ரெட்டி, எங்கள் அணைகளிலேயே போதிய நீர் இல்லை என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து உண்மை நிலையை அறியவும், ஆந்திர அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவும் தமிழகஅதிகாரிகள் குழு ஆந்திரா சென்றுள்ளது. தமிழக பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமைப் பொறியாளர்நடராஜன், கண்காணிப்பு பொறியாளர் பாண்டியராஜன், சென்னை குடிநீர் வாரிய தொழில்நுட்ப இயக்குனர்ரங்கநாதன் உள்ளிட்ட 6 பேர் இக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் ஸ்ரீசைலம், சோமசீலா ஆகிய அணைகளைப் பார்வையிட்டனர். அதில் ஸ்ரீசைலம் அணையில் 234டி.எம்.சியும், சோமசீலாவில் 5 டி.எம்.சி. நீரும் உள்ளது தெரியவந்தது. சோமசீலாவின் மொத்தக் கொள்ளவு 45டி.எம்.சியாகும்.
இந்த அணைக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் அதில் ஒரு பகுதியை தமிழகத்துக்குத் திறந்துவிடவேண்டும் என தமிழக அதிகாரிகள் குழு கோரிககை வைத்தது. இதை ஆந்திரம் ஏற்குமா என்று தெரியவில்லை.
சோமசீலா அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டால் அது கண்டலேறு அணையை அடையும். அங்கிருந்துகிருஷ்ணா கால்வாய் மூலம் சென்னைக்கு நீரைக் கொண்டு வந்துவிட முடியும்.












Click it and Unblock the Notifications