ஜெயலலிதாவிடம் நேற்று இல்லாத மாற்றம்
டெல்லி:
கடந்த முறை டெல்லி வந்தபோது அப்போதைய துணைப் பிரதமர் அத்வானியை சந்தித்துவிட்டு வெளியே வந்தமுதல்வர் ஜெயலலிதா பேட்டியளிக்கையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஆண்டோனியோமொய்னோ என்று தான் குறிப்பிட்டார்.
அந்தப் பெயரைச் சொல்லியும், இத்தாலியப் பெண்மணி என்று குறிப்பிட்டும் சோனியாவை வறுத்தெடுத்தார்.ஆனால், இம்முறை முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சில் பெரும் மாற்றம் தெரிந்தது.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியில் இருக்கும் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துவிட்டுவந்தவர், மிஸஸ் சோனியா காந்தி என்றே அவரைக் குறிப்பிட்டார். இதை முதல்வரிடம் நிருபர்கள் சுட்டிக்காட்டவும் தவறவில்லை.
ஜெயலலிதாவின் பேட்டி விவரம்:
நிருபர்: சோனியா காந்தியுடன் நீங்கள் சமரசம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறதே?
ஜெயலலிதா: அப்படி ஏதும் இல்லை. இந்த விஷயத்தையே நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன்.
நிருபர்: தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் மிகக் கடுமையாகத் தாக்கினீர்களே?
ஜெ: தனிப்பட்ட முறையில் தாக்குதல் என்ற பேச்சுக்கே இடமில்லை, தேர்தலில் பல்வேறு பிரச்சனைகளைக்கிளப்புவது இயற்கையே. மிஸஸ் சோனியை வைத்து ஆட்சி, நிர்வாகம் தொடர்பான பிரச்சனைகளைத் தான் நான்கிளப்பினேன். தனிப்பட்ட தாக்குதல் எல்லாம் நடத்தவில்லை. மிஸஸ் சோனியாவை நான் ஏன் தாக்க வேண்டும்?
நிருபர்: சோனியா காந்தி விஷயத்தில் உங்களிடம் மென்மையான போக்கு தெரிகிறதே?
ஜெ: நான் பன்முகத் தன்மை கொண்டவள். இதுவரை என் ஒரு முகத்தைத் தான் பார்த்திருக்கிறீர்கள். வரும்காலங்களில் என் அடுத்த பக்கத்தையும் பார்ப்பீர்கள்.
நிருபர்: உங்களது கூட்டணிக் கட்சியான பா.ஜ.க...
ஜெ (இடைமறித்து): எங்களது கூட்டணிக் கட்சியா? யார் அது? நாங்கள் இப்போது எந்தக் கூட்டணியிலும்இல்லை. அதிமுக ஒரு தனிக் கட்சி, சுதந்திரமான கட்சி. பிரச்சனைகள் அடிப்படையில் அவர்களுக்கு (பா.ஜ.க.)ஆதரவு தந்து வருகிறோம். இப்போது நாங்கள் யார் கூட்டணியிலும் கிடையாது.
நிருபர்: பொடா சட்டம் தமிழகத்தில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதே?
ஜெ: இது தவறு. தமிழகத்தில் அந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படவே இல்லை. அந்தச் சட்டம் மிக அவசியம்.அதை நீக்கக் கூடாது. நீக்கப்பட்டால், அதற்கு மாறாக ஒரு சட்டம் கொண்டு வருவது குறித்து யோசிப்போம்.பொறுத்திருந்து பார்ப்போம்.
நிருபர்: 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கூட்டணி எப்படி இருக்கும்?
ஜெ: அது பற்றி இப்போது விவாதிக்க விரும்பவில்லை.
நிருபர்: சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தப் போகிறீர்களாமே?
ஜெ: ஒருபோதும் அப்படிப்பட்ட சிந்தனை எனக்கில்லை. 5 ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம்.
நிருபர்: மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறீர்களாமே?
ஜெ: இப்படிப்பட்ட செய்திகளை பத்திரிக்கைகளில் தான் பார்க்கிறேன். இந்தச் செய்திகளை என் அரசியல்எதிரிகள் தான் பரப்புகிறார்கள். என் உடம்புக்கு ஒரு பிரச்சனையும இல்லை. என் வயதுக்குரிய உடல்தொல்லைகள் கூட இல்லை. சிறு சிறு பிரச்சனைகள், அவையும் கட்டுப்பாட்டில் உள்ளன.
நான் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குப் போகப் போவது இல்லை.
நிருபர்: மத்தியில் 12 அமைச்சர்கள் இருக்கிறார்களே? அவர்களை எப்படி தமிழக வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்போகிறீர்கள்?
ஜெ: இதுவரை அவர்களில் ஒருவர் கூட என்னைச் சந்திக்க அப்பாயிண்மென்ட் கேட்கவில்லை. அவர்கள் வந்துசந்தித்தால் தமிழக திட்டங்கள் குறித்துப் பேசத் தயார்.
நிருபர்: சுற்றுச்சூழல்துறையின் ஆணை...
ஜெ: 50 கோடி செலவில் கட்டடம் கட்டத் தடை போட்டிருக்கிறார்கள். நான் புதிய தலைமைச் செயலகம்கட்டுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே திமுக மத்திய அமைச்சர் போட்டுள்ள ஆணை இது.
நிருபர்: பகவத்கீதையை கருணாநிதி அவமதித்துள்ளாரே?
ஜெ: இதற்காக அவர் மீது எப்.ஐ.ஆர். போட்டிருக்கிறோம்.
நிருபர்: திருக்குறளிலும் கடவுள் குறித்து பேசப்பட்டுள்ளதே?
ஜெ: திருக்குறள் எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல. அது உலக மக்களுக்குப் பொதுவானது. அதில் கூறப்படும்கடவுள் ஒரு மதத்தைக் குறிப்பது அல்ல. உலகின் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்ட பெருமைகொண்டது.
நிருபர்: உங்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதே?
ஜெ: அரசியல் பழிவாங்கலுக்காகப் போடப்பட்ட பல வழக்குகளில் இதுவும் ஒன்று. இதையும் வெல்வேன் என்றார்.
கூட்டணி குறித்து மீண்டும் கேள்வி கேட்கப்பட்டபோது, அரசியலில் எதுவும் நடக்கலாம், பொறுத்திருந்துபாருங்கள் என்றார் ஜெயலலிதா.
சில தமிழ்ப் பத்திரிக்கைகளின் டெல்லி நிருபர்கள் தமிழில் கேள்வி கேட்க, அதற்கு தமிழிலும் ஆங்கிலத்திலும்பதில் தந்தார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications