ஜெ. மீது பிரதமரிடம் மத்திய அமைச்சர்கள் புகார்
டெல்லி:-
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மீது முதல்வர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரதமர்மன்மோகன் சிங்கை சந்தித்த தமிழக அமைச்சர்கள் தமிழக அரசின் மீது பதில் புகார் தெரிவித்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் 12 பேரும் தன்னை வந்து சந்தித்து ஆலோசனை நடத்தவில்லைஎன்றும் தமிழக அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்றும் முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்ற்குப் பின்பு, மன்மோகன் சிங்கை மத்தியஅமைச்சர்கள் ப.சிதம்பரம், தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, ராஜா, மணிசங்கர் அய்யர், அன்புமணி ஆகியோர்சந்தித்து ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளித்தனர்.
மத்திய அரசின் கடிதங்களுக்கு தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாகவும், எதிர்க் கட்சிகளின் எம்.பி நிதியைதமிழகம் பயன்படுத்த மறுப்பதாகவும் புகார் கூறினர்.
ராமதாஸ் அறிக்கை:
இதற்கிடையே ஜெயலலிதாவின் டெல்லி பேட்டிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று ஒரு அறிக்கை மூலம் பதில்அளித்துள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நான் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசவில்லை என்று ஜெயலலிதாஅறிவித்திருக்கிறார். அவரது இந்த அறிவிப்பை அந்தர்பல்டி என்று வட இந்திய பத்திரிக்கைகள் கூறியுள்ளன.ஆனாலும் இதனை அவரது அதிரடி அரசியல் என்று தமிழக பத்திரிக்கைகள் சில, செய்தி வெளியிட்டு அவரைமகிழ்விக்க முயற்சிக்கின்றன.
எதுவும் தெரியாத கத்துக்குட்டி, அரசியல் அரை வேக்காடு, அயல்நாட்டு இறக்குமதி என்றும் சோனியா காந்தியின்பெயரை குறிப்பிட்ட போதெல்லாம் அன்டோனியா மொய்னோ எனும் சோனியா என்று அவரது இத்தாலிப்பெயரைச் சொல்லி ஏளனமாக விமர்சித்தவர் ஜெயலலிதா.
இந்தியாவின் புகழ்மிக்க குடும்பத்தின் மருமகள்; முன்னாள் பிரதமரின் மனைவி; நூற்றாண்டை கடந்து விட்ட பழம்பெரும் கட்சியின் தலைவர் என்பதை எல்லாம் மறந்து விட்டு சோனியா காந்தியை தரம் தாழ்ந்து விமர்சனம்செய்தவர் ஜெயலலிதா. இதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
சோனியா காந்தி இத்தாலியர். அதனால் அவரிடம் தேசபக்தியை எதிர்பார்க்க இயலாதது. தேசபக்தி இல்லாமல்போகட்டும்: பதிபக்தியாவது இருக்க வேண்டுமல்லவா? கணவருக்கே விசுவாசமாக இல்லாதவர், கணவரதுதேசத்திற்கு மட்டும் எப்படி விசுவாசமாக இருப்பார்? என்று ஜெயலலிதா பேசினார்.
இப்படியெல்லாம் பேசி விட்டு, அது அரசியல் ரீதியான விமர்சனம் என்று இப்போது ஜெயலலிதா சொல்லுகிறார்.பிரசாரத்தின்போது வீறாப்பாக பேசிவிட்டு இப்போது படுதோல்வி அடைந்ததற்கு பின்னர் அந்தர்பல்டி அடித்துவிட்டு சந்தர்ப்பவாத அரசியலுக்கு இலக்கணம் வகுத்து கொண்டிருக்கிறார்.
இதற்கு என்ன காரணம் என்பது புரிகிறது. அவர் எத்தனை பல்டி அடித்தாலும் அவர் நினைப்பது நடக்காது. அவரதுகனவு பலிக்காது.
தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு நாடெங்கும் ஆதரவு பெருகிவருகிறது. இதில் அதிமுகவின் நிலை பற்றி டெல்லியில் நிருபர்கள் கேட்டதற்கு, பதில் தெரிவிக்காமல் ஜெயலலிதாநழுவியிருக்கிறார். இது தான் சமூக நீதியில் ஜெயலலிதா காட்டும் அக்கறை என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications