பொடா காலி !
டெல்லி:
பொடா சட்டத்தை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
மத்தியில் காங்கிரஸ் தமைையிலான கூட்டணி ஆட்சி அமைந்தபோது உருவாக்கப்பட்ட குறைந்தபட்ச செயல்திட்டத்தில், திமுக, மதிமுக, பா.ம.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, பொடா சட்டம் வாபஸ்பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே பொடா சட்டத்தை ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்யமத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், பா.ஜ.கவின் அமளியால் நாடாளுமன்றத்தின் செயல்பாடு முழுமையாகமுடக்கப்பட்டுவிட்டது.
இந் நிலையில் அடுத்த மாதம் பொடா சட்டம் காலாவதியாகிறது. அதை நீட்டிக்காமல் விட்டுவிட்டாலும் பொடாசெல்லாமல் போய்விடும். ஆனால், அதற்கு முன்னதாகவே அச் சட்டத்தை ரத்து செய்துவிட மத்திய அரசு முடிவுசெய்தது.
இதையடுத்து அதற்காக வரைவு உத்தரவை உள்துறை அமைச்சகம் உருவாக்கியது. இதற்கு சட்டத்துறையின்அனுமதியும் பெறப்பட்டது. இதையடுத்து இன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அந்த உத்தரவை முன் வைத்தார். அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இத் தகவலை உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்த உத்தரவின்படி பொடா சட்டம் ஓராண்டுக்குப் பிறகே முழுமையாக செயலிழக்கும். இந்த ஓராண்டுக்குள்பொடா சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகளை பொடா மறு ஆய்வுக் குழு மறுபரிசீலனை செய்து முடிக்கஅவகாசம் தரப்படும்.
மேலும் பொடாவுக்குப் பதிலாக சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்துக்கு அதிகாரம் வழங்கவும் மத்தியஅமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாகமரண தண்டனை கூட விதிக்கும் வகையில் இச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.
இதையடுத்து பொடாவுக்குப் பதிலாக இனி இந்தச் சட்டத்தின் கீழ் தீவிரவாத அமைப்புகள் தடை செய்யப்படும்.முதல் தடை அல்-கொய்தாவுக்கு விதிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணத்தில் இருக்கும் ஜனாதிபதி அப்துல் கலாம் நாடு திரும்பியவுடன் பொடாரத்து உத்தரவு வெளியாகும். அதன்பிறகு யாரையும் பொடாவில் கைது செய்ய முடியாது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications