For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு வழியாக ரிலீசாகும் கஜேந்திரா

By Staff
Google Oneindia Tamil News

விஜய்காந்த் நடித்த கஜேந்திரா படம் ஒருவழியாய் இன்று அல்லது நாளை ரிலீஸ் ஆகலாம் என்று தெரிகிறது.

இந்தப் படம் ஆரம்பம் முதலே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

டாக்டர் ராமதாஸை விஜய்காந்த் தாக்கிப் பேச, விஜயகாந்த்துக்கும், பாமகவும் இடையே மோதல் வெடித்தது. இதனால் கஜேந்திராவைத்திரையிட விட மாட்டோம் என பாமகவினர் மிரட்டினர். தொடர்ந்து விஜயகாந்த் ரசிகர்கள், பாமக தொண்டர்களிடையே மோதல், அடிதடிநடந்தது.

கந்து வட்டிக்கு பணம் வாங்கி படத்தை எடுத்து முடித்த துரை, பா.ம.கவினரின் மிரட்டலால், படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தினமும்மீட்டர் வட்டி கட்டிக் கொண்டிருக்க, விஜய்காந்த் தனது சொந்தப் படத்தில் நடிக்கப் போய்விட்டார்.

ராமதாசுடன் விஜய்காந்த் பேசி படத்தை ரிலீஸ் செய்வார் என்று எதிர்பார்த்து ஏமாந்த துரை வேறு வழியில்லாமல் ராமதாசிடம் போய்சரணடைந்தார்.

பா.ம.கவும் விட்டுத் தர முன் வந்தது. ஆனால், தனது மானத்தை ராமதாசிடம் துரை அடகு வைத்துவிட்டதாக கொதித்த விஜய்காந்த்,படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கும் வேலைகளில் இறங்கினார்.

தனக்கு துரையிடம் இருந்து சம்பள பாக்கி வர வேண்டியிருப்பதால் படத்தின் பிரிண்டுகளை அவரிடம் தரக் கூடாது என லேப் லெட்டர்கொடுத்தார் விஜய்காந்த்.

இந் நிலையில் படத்திற்கு பைனாஸ் செய்த ஜஸ்வந்த் சந்த் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Flora and Vijaykanthஅதில், கஜேந்திரா படத்திற்காக ரூ. 2.50 கோடி கொடுத்துள்ளேன். ஆனால் தயாப்பாளர் துரை அந்தப் பணத்தைத் திருப்பித் தரவில்லை.எனவே பணத்தை துரை திரும்பித் தரும் வரை படச் சுருள், விளம்பரம் தொடர்பான பிற படச் சுருள்கள், நெகட்டிவ் ஆகியவற்றைதுரையிடம் தரப்படக் கூடாது என ஜெமினி கலர் லேபுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாத்த நீதிபதி அசோக் குமார், கஜேந்திரா படம் தொடர்பான எந்த படச் சுருளையும், நெகட்டிவையும் துரைக்குத் தரக்கூடாது என்று உத்தரவிட்டார்.

இருப்பினும் பெரிய அளவில் பணம் போட்டு எடுத்த படம் வீணாகக் கூடாது என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்ட வாதத்தைக் கருத்தில்கொண்ட நீதிபதி, முதல் கட்டமாக ரூ. 1.50 கோடி பணத்தை ஜஸ்வந்த் சந்த்திடம் துரை கொடுக்க வேண்டும்.

மேலும், ரூ. 80 லட்சம் மதிப்புக்கு இரு சொத்துக்களை ஜஸ்வந்த் சிங் பெயருக்கு அடமானம் வைக்க வேண்டும். மீதமுள்ள ரூ. 20 லட்சம்பணத்திற்கு உத்தரவாதம் எழுதித் தர வேண்டும். இதை செய்தால் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று துரைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து பைனாான்ஷியர் ஜஸ்வந்த் சந்துக்கு துரை செலுத்த வேண்டிய பணத்தை, கஜேந்திரா படத்தை வாங்கியவினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் வழங்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து இன்றே இந்தப் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X