தமிழக போலீஸாருக்கு இஸ்ரேல் தற்காப்பு பயிற்சி
டெல்லி:
டெல்லியில் உள்ள ஆசியாவின் மிகப் பெரிய சிறைச் சாலையான திஹார் சிறைச் சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதமிழக காவல்துறையினருக்கு இஸ்ரேலின் தற்காப்புக் கலைப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஆசியாவிலேயே மிகவும் பாதுகாப்பான, பெரிதான சிறைச் சாலை திஹார் சிறைச் சாலை. அதி நவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட திஹார்சிறையிலிருந்து கைதி தப்புவது என்பது மிகவும் கடினமான விஷயம்.
அத்தகைய சிறப்பு பெற்ற திஹார் சிறைச் சாலையைப் பாதுகாத்து வருவது தமிழக சிறப்புக் காவல் படையினர் தான்.
தமிழக காவல்துறையினர், திஹார் சிறையின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. மொத்தம் 1,000 தமிழககாவல் துறையினர் திஹார் சிறை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் திஹார் சிறையில் உள்ள தமிழக போலீஸாருக்கு நவீன பாதுகாப்புப் பயிற்சிகள் அளிக்க முடிவு செய்துள்ளது மத்தியஉள்துறை அமைச்சகம். முதல் கட்டமாக இஸ்ரேல் நாட்டின் தற்காப்புக் கலையான கருமாக் என்ற கலையில் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
முதலில் 15 காவலர்களுக்கு இந்த தற்காப்புக் கலை பயிற்றுவிக்கப்படுகிறது. ஆயுதமே இல்லாமல் எதிரியைத் தாக்கி ஒடுக்கும்,தேவைப்பட்டால் கொல்லும், பயங்கரமான தாக்குதல் கலை இது.
தமிழக சிறப்புக் காவல் படையின் 8வது பட்டாலியன் தலைவரான சஞ்சய் குமார் இதுகுறித்துக் கூறுகையில், பயங்கர தீவிரவாதிகள் முதல்பல வகையான குற்றவாளிகள் வரை அடைக்கப்பட்டுள்ள திஹார் சிறையில் மிகவும் விழிப்புடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவேண்டியது அவசியம்.
கருமாக் கலை மூலம் எப்போதும் விழிப்புணர்வுடனும், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையிலும் மன பலத்தை அதிகரிக்க முடியும்என்றார்.
-
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications