தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 200 கோடி: லாலு
சென்னை:
தமிழகத்தின் அமலாக்கப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்யாதவ் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
சென்னை நகரில் சேப்பாக்கம் உள்பட மேலும் 6 இடங்களில் ரிசர்வேசன் கவுண்டர்கள் திறக்கப்படும். ரயில்வேயின் எந்தப் பிரிவும்தனியார்மயமாக்கப்படாது.
அதே போல உலக வங்கி, ஐ.எம்.எப் ஆகிய அமைப்புகளிடம் ரயில்வே கடன் வாங்காது. அவர்களிடம் கடன் வாங்கினால் அவர்கள் சொல்கேட்டு ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டி வரும். அதைச் செய்யவே மாட்டேன்.
இப்போதே ஐஎம்எப் மற்றும் உலக வங்கியிடம் இந்தியா வாங்கியுள்ள கடனை வைத்துப் பார்த்தால், ஒவ்வொரு இந்தியனின் தலையிலும்ரூ. 44,000 கடன் சுமை உள்ளது. ரயில்வேயை தனியார்மயமாக்க பா.ஜ.க. அரசு முயன்றது.
ஆட்களை வேலைக்குச் சேர்ப்பதைக் கூட நிறுத்தியிருந்தார்கள். ரயில்வேயில் காலியாக உள்ள எல்லா பதவிகளும் நிரப்பப்படும். அதில்80,000 கேங் மேன் பதவிகளும் அடங்கும்.
சென்னை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் மயக்க பிஸ்கெட் கொடுத்து பயணிகளிடம் கொள்ளையடிக்கும் கும்பலைப் பிடிக்கஉத்தரவிட்டுள்ளேன். இதைத் தடுக்கத் தவறும் ரயில்வே போலீசார் மீது நடவடிக்கை எடுப்போம்.
ரயில்வே பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டதைப் போல தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 200 கோடி ஒதுக்கப்பட்டுவிட்டது.
முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதைப் போல மத்தியில் கூட்டணியில் எந்த மாற்றமும் வராது. அவரை நான் எனது சகோதரி போலவேநினைக்கிறேன். ஆனால், சமூக நீதிக்கு எதிரான நிலையை அவர் எடுத்து வருகிறார்.
1999ம் ஆண்டில் சோனியா காந்தியை பிரதமராக்க ஆதரவுக் கடிதம் தர என்னுடன் தான் வந்தார் ஜெயலலிதா. ஆனால், ஒரு கட்சியின்தலைவர் கடைசி நேரத்தில் ஏமாற்றியதால், சோனியா அப்போது பிரதமராக முடியாமல் போய்விட்டது.
பாபர் மசூதி இடிப்பை நேரில் பார்த்த அமெரிக்காவின் டைம் பத்திரிக்கையின் நிருபர்கள் இருவர், மசூதியை இடிக்குமாறு பா.ஜ.க.தலைவர்களான அத்வானியும் உமா பாரதியும் கரசேவகர்களைத் தூண்டிவிட்டதை நேரில் கண்ட சாட்சிகள். அவர்களிடம் லிபரான் கமிஷன்விசாரணை நடத்தி அத்வானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் லாலு.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications