வைகோவால் சென்னை போலீஸ் கமிஷ்னர் மாற்றம்
சென்னை:
சென்னை நகருக்குள் வைகோவின் நடைபயணத்தை தடுக்காமல் விட்ட சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் கே.நடராஜனும் செங்கைகிழக்கு மாவட்ட எஸ்.பி.சங்கரும் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே சென்னை போலீஸ் கமிஷ்னராக இருந்து வந்த ஆர்.நடராஜ் மீண்டும் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றேதனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பொறுப்பில் இருந்த கே.நடராஜன் மாற்றப்பட்டு, மின்வாரிய கண்காணிப்புப் பிரிவின் கூடுதல்டிஜிபியாக அதிகாரமில்லாத பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஆணையராக இருந்து சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்து வந்த ஆர்.நடராஜ்மீண்டும் சென்னை போலீஸ் கமிஷ்னராக்கப்பட்டுள்ளார்.
இதேபோல, செங்கை கிழக்கு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சங்கர் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக சந்தீப் மிட்டல்நியமிக்கப்பட்டுள்ளார். சங்கர் சென்னை பொருளாதார குற்றப் பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது அதிகாரம் குறைவானபதவியாகும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த 15ம் தேதி செங்கை கிழக்கு மாவட்டம் மற்றும் சென்னை நகர காவல்துறையினரையும் மீறிநள்ளிரவில் தனது நடை பயணத்தை வெற்றிகரமாக நடத்தினார்.
அப்போது வைகோவைக் கைது செய்ய வாரண்டுடன் சென்ற எஸ்.பி. சங்கரால் அவரைக் கைது செய்ய முடியவில்லை. வாரண்டைப் பெறமறுத்த வைகோ, போலீசார் ரிலாக்ஸ்டாக இருந்த நேரத்தில் திடீரென நடைபயணத்தை ஆரம்பித்து சென்னைக்குள் நுழைந்தார்.
நள்ளிரவில் சென்னை நகருக்குள் அவர் நுழைந்து நடை பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தபோது என்ன செய்வது என்று தெரியாமல்போலீசார் தவித்தனர். சுமார் 2 மணி நேரத்தில் அவர் தீவுத் திடலின் அருகில் வந்துவிட, அங்கு வைத்துத் தான் அவர் கைதுசெய்யப்பட்டார்.
இதனால் சென்னை போலீஸ் கமிஷினருக்கு டப்பா பதவியான மின்வாரிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சென்னை சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக இருந்த கேவிஎஸ் மூர்த்தி இடமாற்றம் செய்யப்பட்டு தமிழக சட்டம் ஒழுங்குப் பிரிவு கூடுதல்டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்ட எஸ்.பியாக இருந்த ஆனந்த் குமார் சொமானி, நெல்லை மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல நெல்லை மாவட்ட எஸ்.பி. சாரங்கன் எந்த பொறுப்பும் தரப்படாமல் இட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அதே போலசிவகங்கை மாவட்ட எஸ்.பி. பதவியும் காலியாக வைக்கப்பட்டுள்ளது.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications