தமிழறிஞர்கள் பெரும் மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் மொழியை செம்மொழியாக மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு தமிழறிஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பும் பெரும்மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

தொன்மை வாய்ந்த தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து முன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தரும், தமிழறிஞருமான வி.சி.குழந்தைச்சாமி கூறுகையில், தமிழுக்குரிய இந்தஅங்கீகாரம் நீண்ட காலமாக கோரப்பட்டு வந்தது.

இந்தியாவின் வரலாற்றையும், பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் அறிய வேண்டுமானால், அதற்கு தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இருகண்கள் வேண்டும். ஒரு கண்ணுக்கு மட்டுமே இத்தனை நாட்கள் அங்கீகாரம் கிடைத்திருந்தது. இப்போது இன்னொரு கண்ணும்பிரகாசமாகியுள்ளது.

தமிழ் கற்றால் தான் பாரதத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளதற்கு எனது நன்றிகள் என்றுகூறியுள்ளார் குழந்தைச்சாமி.

தமிழறிஞர் மா.நன்னன் கூறுகையில், உலகின் தொன்மை வாய்ந்த ஒரு சில மொழிகளில் தமிழும் ஒன்று.

மிகச் சிறந்த இலக்கிய வளத்தை தன்னகத்தே கொண்டது தமிழ். அத்தகைய சிறப்பு மிக்க தமிழுக்கு இப்போதுதான் மத்திய அரசின்அங்கீகாரம் கிடைத்துள்ளது. இருப்பினும் தாமதமானாலும் பரவாயில்லை, இப்போதாவது சிறப்பு கிடைத்ததே என்று சந்தோஷப்படுவோம்என்றார்.

கவிஞர் அப்துல் ரகுமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமஸ்கிருதத்தில் இருந்த சில படைப்புகளை ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அறிஞர்மேக்ஸ் முல்லர் ஜெர்மனியில் மொழி பெயர்த்துள்ளார். காரணம், சமஸ்கிருதம் உலக அளவில் அறியப்பட்டிருந்தது.

இப்போது தமிழுக்கும் அத்தகைய பெருமை கிடைக்கவுள்ளது. இனி தமிழின் சிறந்த படைப்புகளான சிலப்பதிகாரம், தொல்காப்பியம்,மணிமேகலை, கம்ப ராமாயணம், சீவக சிந்தாமணி, அக நானூறு, புற நானூறு போன்ற பழம் பெரும் காப்பியங்கள் உலக மொழிகளில்உலவும் வாய்ப்பு உருவாகும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+