தீவிரவாதம் குறித்த கருத்தரங்கு: ஜெ. துவக்குகிறார்
சென்னை:
தீவிரவாதம் குறித்த தேசியக் கருத்தரங்கை முதல்வர் ஜெயலலிதா வரும் 22-ம் தேதி சென்னையில் துவக்கிவைக்கிறார்.
இது குறித்து டிஜிபி ரமணி நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த ஆண்டு குற்றத் தடுப்பு மேலாண்மை, பன்முக அணுகுமுறை குறித்த தேசியக் கருத்தரங்கம் சென்னையில்நடத்தப்பட்டது. இந்த ஆண்டு தீவிரவாதம் குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கம் வரும் 22, 23 தேதிகளில்தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
இதில் 24 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் 8 மத்தியக் காவல் அமைப்புகளிலிருந்தும் 50-க்கும்மேற்பட்ட மூத்த காவல் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தீவிரவாதத்தை எதிர் கொள்வதிலுள்ளபிரச்சினைகள் மற்றும் அவற்றை சமாளித்தல் ஆகியவை குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.
சர்வதேச தீவிரவாதமும் இந்தியாவில் அதன் தாக்கமும்; எல்லை தாண்டிய ஊடுருவல்கள்; எல்லை மேலாண்மை;இடதுசாரி பயங்கரவாதம் (நக்ஸலைட்டுகள், மாவோ தீவிரவாதிகள் பிரச்சினை); மதச்சார்புடைய தீவிரவாதம்;முக்கிய நபர் பாதுகாப்பு ஆகிய 6 தலைப்புகளில் தனித்தனியே விவாதம் நடைபெறும்.
இக்கருத்தரங்கில் கலந்தாய்வு செய்யப்பட்ட தலைப்புகளின் அடிப்படையில் பரிந்துரைகள் தயார் செய்யப்படும்.கருத்தரங்கைத் தொடக்கி வைக்கும் ஜெயலலிதா, தமிழ்நாடு காவல் பயிற்சி குறித்த இணையதளத்தையும் காவல்பயிற்சிக் கல்லூரியில் புதுப்பிக்கப்பட்ட அலுவலர்கள் உணவகத்தினையும் திறந்துவைக்கிறார்.
கருத்தரங்கின் இரண்டாம் நாளில் ஆளுநர் ராம் மோகன் ராவ் நிறைவுரை ஆற்றுகிறார் என்று கூறினார் ரமணி.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications