இந்தியா திரும்பினார் கலாம்
டெல்லி:
தான்சானியா மற்றும் தென் ஆப்ரிக்காவில் 8 நாட்கள் சுற்றுப் பிரயாணத்தை முடித்து விட்டு குடியரசுத் தலைவர்அப்துல் கலாம் டெல்லி திரும்பினார்.
டெல்லி விமான நிலையத்தில் அவரை பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர்வரவேற்றனர்.
முன்னதாக இந்தியா திரும்பும் வழியில், விமானத்தில் கலாம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:
ஆப்ரிக்கா வளரவேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. செயற்கைக் கோள் மூலம் இக்கண்டத்தில் உள்ள 53நாடுகளையும் இணைக்கவும், கண்ணாடி இழைகள் மற்றும் வயர்லெஸ் இணைப்புகளுக்கு உதவுவதாகவும்கூறியுள்ளோம். இதற்கு 3 ஆண்டுகளில் ரூ.230 கோடி செலவாகும். ஆப்ரிக்காவுக்கான இந்திய கடன் உதவித்திட்டத்தில் இருந்து இந்த உதவி செய்யப்பட இருக்கிறது.
ஆப்ரிக்கப் பயணத்தில் என்னை மிகவும் கவர்ந்தது நெல்சன் மண்டேலாவுடனான சந்திப்பு. மண்டேலா என்னைப்பார்த்ததும் தனது ஊன்றுகோலை விட்டுவிட்டு. என்னை ஊன்றுகோலாக்கி கொண்டார்.
பின்னர் பீட்டர்மெரிட்ஸ்பர்க்கில் காந்தி ரயிலிருந்து இறக்கி விடப்பட்ட இடத்தைப் பார்த்தேன். ஆயிரக்கணக்கானமக்கள் தினமும் ரயிலில் செல்கிறார்கள். ஆனால் சிலர் செய்த அநியாயத்தால் நமக்கு மகாத்மா காந்தி கிடைத்தார்.
தென் ஆப்ரிக்க அதிபர் தாபோ மெபிகி, ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா இடம்பெற தென் ஆப்ரிக்கா ஆதரவுஅளிக்கும் என்று தெரிவித்துள்ளார். இது நமக்கு மிக முக்கியமானது என்றார்.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications