ஜெ. குழப்பம் ஏற்படுத்த பார்க்கிறார்: வைகோ
சென்னை:
அணி மாற்றம் என்று கூறி முதல்வர் ஜெயலலிதா குழப்பம் ஏற்படுத்தப் பார்ப்பதாக மதிமுக பொதுச் செயலாளர்வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
நடைபயணத்தை முடித்த பின்பு டெல்லி சென்ற வைகோ, டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மன்மோகன் சிங்கைசந்தித்து நடைபயணத்தை நோக்கங்களை வலியுறுத்தி விட்டு சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தென்னக நதிகளை இணைக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினேன். இதுகுறித்து ஆய்வுப்பணிஅமைத்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
கர்நாடக அரசு ரூ. 5,000 கோடி செலவில் நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அவற்றைசெயல்படுத்தினால் தமிழகத்திற்கு வரக்கூடிய நீர் முற்றிலும் நிறுத்தப்படும் என்று கூறினேன். இதை கவனிப்பதாகபிரதமர் உறுதியளித்தார்.
இந்திய கடற்படை தளபதி அருண்பிரகாஷ் இலங்கை சென்று இருந்தபோது, தமிழக மீனவர்களை இலங்கைகடற்படையினர் தாக்குவது இல்லை. விடுதலைப்புலிகள்தான் தாக்குவதாக கூறி இருந்தார்.
உண்மைக்கு புறம்பாக அவர் கூறியது அதிர்ச்சி அளிக்கிறது. இது குறித்து பிரதமரிடம் மனு ஒன்றைக் கொடுத்தேன்.அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, இது இந்திய அரசின் கருத்து அல்ல. கடற்படை தளபதியின் தனிப்பட்டகருத்தாக இருக்கலாம். இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் புகார் தெரிவியுங்கள் என்று கூறினார்.நானும் அவ்வாறு ஒரு புகார் அளித்தேன்.
பாஜகவுடன் கூட்டணி வைத்து ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்டார். இப்போது காங்கிரசை பாராட்டிபேசுகிறார். அணி மாற்றம் என்று சொல்லி குழப்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார். தமிழகத்தில் இது ஒரு போதும்எடுபடாது.
மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு என்று மதிமுக முன்பு எடுத்த முடிவில் மாற்றம் கிடையாது.
பொடா சட்டம் ரத்து செய்வதை முன் தேதியிட்டு அமல்படுத்த வேண்டும். இதில் கைதான அனைவரையும்விடுதலை செய்ய வேண்டும்.
மதிமுக நடைபயணத்திற்கு சென்னையில் தடை விதிக்கப்பட்ட போதும், நான் கைது செய்யப்பட்ட போதும் திமுககடுமையாக கண்டித்து உள்ளது. இது நடைபயணத்தை திமுக பாராட்டியதற்கு சமம் ஆகும்.
தமிழகத்தில் எங்கள் கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. எப்போது ஆட்சியைப் பிடிப்போம் என்பதை உறுதியாகசொல்ல முடியாது. மக்கள் எங்களை எந்த இடத்தில் அமர வைக்க விரும்புகிறார்களோ அந்த இடத்தில் அமரநாங்கள் தயாராக இருக்கிறோம்.
சென்னை நகருக்குள் எனது நடைபயணத்தை தடுக்க தவறியதால்தான் போலீஸ் கமிஷனரும், போலீஸ்சூப்பிரண்டும் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். நல்லவேளை, சஸ்பெண்டு செய்யவில்லையே என்றுசந்தோஷப்படுங்கள் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications