பொடா ரத்து தவறான முடிவு: ஜெ.
சென்னை:
பொடா சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது தவறான முடிவாகும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தீவிரவாதம் குறித்த தேசிய கருத்தரங்கைத் தொடங்கி வைத்து ஜெயலலிதா பேசியதாவது:
பொடா சட்டம் ரத்தானதால், தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் மாநில அரசுகளின் வலிமை குன்றியுள்ளது.இதனால் நாட்டின் பாதுகாப்பில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்க, பலம் பொருந்திய சட்டம் எதுவும் தற்போது இல்லை. ஏற்கனவே இருக்கும்சட்டங்கள் கடுமையான குற்றங்களை ஒடுக்கப் போதுமானவையாக இல்லை. எனவே பொடா போன்ற சட்டங்கள்நாட்டின் பாதுகாப்புக்கு நிச்சயம் தேவை. இப்போது அச் சட்டம் திரும்பப் பெறப்பட்டிருப்பது நாட்டின்பாதுகாப்பை நீர்த்துப் போகச் செய்துள்ளது.
பொடா சட்டத்தில் உள்ள ஷரத்துகள் மற்ற சட்டங்களில் சேர்க்கப்படும் என்று கூறவது போதிய நம்பிக்கையைஅளிக்கவில்லை.
தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை சமாளிக்க காவல்துறைநவீனப்படுத்தப்பட வேண்டும். மாநில காவல்துறைக்கும், மத்திய அரசின் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையேபோதுமான ஒத்துழைப்பு இல்லை.
இதைத் தவிர்க்க, மாநில காவல்துறை, மத்திய புலனாய்வுத் துறை, சுங்கத்துறை, கடலோரப் பாதுகாப்பு படைஆகியவற்றை கணிப்பொறி மூலம் இணைக்க வேண்டும்.
நாட்டின் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், போதை மருந்து கடத்தல் மற்றும் தீவிரவாதிகளின்ஊடுறுவலுக்கு வழி வகுக்கும் என்பதாலும்தான் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையேயான கப்பல்போக்குவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தேன் என்று கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications