காவிரி ஆணையத்தை கூட்ட கர்நாடகம் எதிர்ப்பு
டெல்லி:
காவிரி ஆணையத்தை கூட்டும் அவசியம் தற்போது இல்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடந்த காவிரி கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், புதுவை மற்றும் கேரளாவைச்சேர்ந்த மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். மத்திய நீர்வளத்துறை செயலாளர் வினோத் துக்கல் கூட்டத்துக்குத்தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக மாநில தலைமைச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் நாராயணன், தமிழக காவிரிகண்காணிப்பு குழு தலைவர் மோகனகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த ஜூன் முதல் செப்டம்பர் 20ம் தேதி வரை தமிழகத்திற்குத் தர வேண்டிய 33 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம்திறந்து விடவில்லை; அதை உடனடியாக திறந்துவிட ஏற்பாடு செய்யவேண்டும் என்று தமிழக அரசு சார்பில்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் காவிரி நதிநீர் பங்கீடு குறித்து 4 மாநில அதிகாரிகளும் விவாதித்தனர். கூட்டத்தின் முடிவில் நீர்வளத்துறைசெயலாளர் துக்கல் நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சினையில் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்துகூட்டத்தில் விவாதித்தோம். இக் கூட்ட விவரம் குறித்து நீர் வளத்துறை அமைச்சரிடமும், பிரதமரிடமும்தெரிவிக்கப்படும்.
காவிரி ஆணையத்தை கூட்டும் தேதியை பிரதமர் முடிவு செய்வார் என்று கூறினார்.
பின்னர் கர்நாடகத்தின் தலைமை செயலாளர் மிஸ்ரா நிருபர்களிடம் பேசும்போது, கர்நாடகாவில் 4 சதவீதமழையும், தமிழகத்தில் 3 சதவீத மழையும் பெய்துள்ளதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. எனவேதற்போது காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை என்று தெரிவித்தார்.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications