சென்னை பள்ளிகளில் மீண்டும் வெடிகுண்டு வதந்தி
சென்னை:
சென்னை தனியார் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மாணவர்கள், பதறியடித்து ஓடினார்கள்.
சென்னை பள்ளிகளில் சில மாதங்களுக்கு முன்பு சரமாரியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து நகரையேபீதிக்குள்ளாக்கியது. இந் நிலையில் மீண்டும் சென்னையில் சில பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால்பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பானை தம்புச் செட்டித் தெருவில், தனியார் மேல் நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்திற்கு தொலைபேசியில் பேசிய நபர், பள்ளி வகுப்பறை ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக்கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து போலீஸாருக்குத் தகவல் போனது. வெடிகுண்டு கண்டுபிடிப்புப் படையினருடன் வந்தபோலீஸார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி எனத் தெரியவந்தது.
முன்னதாக வெடிகுண்டு பீதி கிளம்பியவுடன் வகுப்பறைகளில் இருந்த மாணவர்கள் பதறியடித்து வெளியேறினர்.இதனால் சில மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. வெடிகுண்டு வதந்தி காரணமாக இந்தப் பள்ளியில்நடக்கவிருந்த காலாண்டுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.
இதேபோல, பானைப் பகுதியில் உள்ள வேறு சில பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications