ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி அஞ்சு ஜார்ஜ் தங்கம்
டெல்லி & ஏதென்ஸ்:
ஜப்பானில் நடைபெற்ற யோஹாமா டிராக் அன்டு ஃபீல்டு தடகளப் போட்டியில் இந்தியாவின் அஞ்சு பாபி ஜார்ஜ்,ஒலிம்பிக் சாம்பியன் தாதியானாவை வென்று தங்கப் பதக்கம் பெற்றார்.
கடந்த மாதம் நடைபெற்ற ஏதென்ஸ் ஒலிம்பிக் நீளம் தாண்டும் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றும்அஞ்சு ஜார்ஜ் பதக்கம் வெல்ல இயலவில்லை. ரஷ்யாவின் தாதியானா லெபடேவா தங்கப் பதக்கம் வென்றார்.
இந் நிலையில் ஜப்பானில் நடைபெற்ற யோஹாமா டிராக் அன்டு ஃபீல்டு தடகளப் போட்டியில் அஞ்சு ஜார்ஜ் தங்கம்வென்றார். அஞ்சு ஜார்ஜும், தாதியானாவும் தலா 6.61 மீட்டர் நீளம் தாண்டி சமநிலை பெற்றிருந்தாலும், அஞ்சு2-வது வாய்ப்பிலேயே இந்த தூரத்தை எட்டியதால் தங்கப் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.
லெபடேவா வெள்ளிப் பதக்கமும், 6.44 மீட்டர் நீளம் தாண்டிய ஜப்பானைச் சேர்ந்த யுகா வெண்கலப் பதக்கமும்பெற்றனர்.
டெல்லியில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராலிம்பிக்கில் இந்தியாவுக்குத் தங்கம்:
ஊனமுற்றோருக்காக நடத்தப்படும் பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் தேவேந்திரா தங்கப்பதக்கம்வென்றதோடு புதிய உலக சாதனையும் படைத்தார்.
கிரீஸ் தலைநகர் ஏதென்சில் பாராலிம்பிக் போட்டியில் போலியோ, கை, கால் இழந்தவர்களுக்கான எப்-44/46பிரிவு ஈட்டி எறிதலில் தேவேந்திரா 62.15 மீட்டர் தூரம் எறிந்து தனது முந்தைய உலக சாதனையானயை (59.77மீ.) முறியடித்தார். சீன வீரர்களான காவோ(55.57 மீ.), வாங்(55.54 மீ.) ஆகியோர் வெள்ளி, வெண்கலம்வென்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் சாதுல்பூரில் பிறந்த தேவேந்திரா கடந்த ஆண்டு பர்மிங்காம் உலக சாம்பியன்ஷிப்போட்டியில் 59.77 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
தேவேந்திராவுக்கு பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உட்பட பலரும் தங்களதுவாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications