அதிமுகவுடன் கூட்டணி இல்லை: காங். அறிவிப்பு
டெல்லி:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலின்போது அதிமுவுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் மேலிடம்திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கடந்த வாரம் முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்றபோது பிரதமர் மன்மோகன் சிங்கை புகழ்ந்து பேசியதோடு,எதிர்காலத்தில் கூட்டணி மாற்றம் வரலாம் என்று கூறினார். இதையடுத்து சட்டசபைத் தேர்தலுக்கு காங்கிரஸ்கட்சியுடன் கூட்டணி வைக்க ஜெயலலிதா முயல்வதாகக் கூறப்பட்டது.
இந் நிலையில் ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் மேலிடம் பதிலளித்துள்ளது. தமிழக காங்கிரஸ் பொறுப்பாளாரானகிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்த ஜெயலலிதா முயற்சிக்கிறார். அவரது முயற்சிகள் பலிக்காது. காங்கிரஸ்கட்சி தலைவர் சோனியா காந்தியை அவர் கடுமையாக விமர்சித்ததை நாங்கள் இன்னும் மறக்கவில்லை. அதைஅரசியல் ரீதியான விமர்சனம் என்று ஜெயலலிதா கூறுவதை நாங்கள் ஏற்க முடியாது.
மேலும் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி ஊழல் ஆட்சி. அவர் மீதே பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன.அவரது ஊழல் ஆட்சிக்கு எதிராகத் தான் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர். மேலும்ஜெயலலிதா ஒரு மதவாதி. அவருடன் கூட்டணி அமைக்க மாட்டோம்.
தமிழத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலை திமுக கூட்டணியில் இருந்தபடியே சந்திப்போம். அதில் எந்தமாற்றமும் இல்லை. அந்தத் தேர்தலிலும் எங்கள் அணிதான் வெற்றி பெறும். மக்கள் அலை ஜெயலலிதாவுக்குஎதிராக வீசுகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளோம். மாவட்டவாரியாக கூட்டங்களை நடத்தி, கட்சியை வலுப்படுத்துவோம். கட்சிக்கு விரோதமாகவும், கட்சி விதிகளை மீறுவோர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications