ஜெயலட்சுமி வழக்கு: உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை:
சிவகாசி ஜெயலட்சுமி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மட்டுமே விட வேண்டும்.இல்லாவிட்டால் சென்னை உயர்நீதிமன்றம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்றுமிரட்டல் வந்ததால் உயர்நீதிமன்றத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
சிவகாசி ஜெயலட்சுமியின் வழக்கை சிபிஐ விசாரணைக்கு விடுவதா அல்லது தமிழகபோலீஸாரின் விசாரணைக்கு விடுவதா என்பது குறித்து இன்று சென்னைஉயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.
தென் மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி.ராஜேந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவைநீதிபதிகள் மாசிலாமணி, சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரணைநடத்தவுள்ளது. இந்த பெஞ்ச்தான் ஜெயலட்சுமி வழக்கை சிபிஐக்கு விட வேண்டும்என்று சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தீர்ப்பளித்தது.
ஜெயலட்சுமி வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், நேற்றே ஜெயலட்சுமிமதுரையிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டு விட்டார். இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்றபதிவாளருக்கு ஒரு கடிதம் வந்தது.
அந்தக் கடிதத்தில், ஜெயலட்சுமி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மட்டுமே விடவேண்டும், தமிழக காவல்துறையிடம் வழக்கை ஒப்படைக்கக் கூடாது. மீறிஒப்படைத்தால் உயர்நீதிமன்றம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்றுகூறப்பட்டிருந்தது.
இதையடுத்து எஸ்பிளனேடு காவல் நிலையத்தார் உயர்நீதிமன்றத்தில் தீவிர சோதனைநடத்தினர். அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications