ஜெயலட்சுமி மோசக்காரி: ஒழுக்கசீலர் ராஜசேகர் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Jayalakshmi and Rajasekarசிவகாசி ஜெயலட்சுமி செய்த மோசடிகளை அம்பலப்படுத்துவேன் என்று அவரைத் திருமணம் செய்ததாகக்கூறப்படும் கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர் ராஜசேகர் கூறியுள்ளார்.

ராஜசேகர் நெல்லையில் டிஎஸ்பியாக இருந்தபோது தன்னை 2-வது திருமணம் செய்து குடும்பம் நடத்தினார்என்றும், ராஜசேகருடன் அமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பணம் கொடுத்ததாகவும் ஜெயலட்சுமி பரபரப்புபேட்டியளித்திருந்தார்.

இதற்கு ராஜசேகர் பதில் அளித்துள்ளார். நிருபர்களிடம் இது தொடர்பாக அவர் கூறியதாவது:

சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மனிதர்கள் ஒவ்வொருவரும் சில நேரங்களில் தவறு செய்வது இயல்பு. எப்போதோசெய்த தவறை திரும்பத் திரும்ப சொல்லி ஒருவரை காயப்படுத்தக்கூடாது. இந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறும்ஜெயலட்சுமி ஒன்றும் யோக்கியமானவர் அல்ல.

பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலத்தில் போய் சந்தித்து பணம் கொடுத்ததாகக் கூறுவதெல்லாம் சுத்தப்பொய்.முதலில் அமைச்சர்களின் பி.ஏ.க்களைத்தான் தெரியும் என்றும், அமைச்சர்களைத் தெரியாது என்றும் சொன்னார்.இப்போது அமைச்சர்களைச் சந்தித்தேன் என்று கூறுகிறார்.

Jayalakshmi and Rajasekarஇவ்வாறு முன்னுக்குப்பின் முரணாக பேசுவதில் இருந்தே அவர் சொல்வது பொய் என்பதை புரிந்து கொள்ளலாம்.நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப்போல் அவர் தன் வாயாலேயே கெடுவார் என்பது மட்டும் உறுதி. என்மடியில் கனம் இல்லை என்பதால், சிபிஐ விசாரணையை தைரியமாக எதிர்கொள்வேன்.

காவல் துறையில் 31 ஆண்டுகள் பணியாற்றி பல பதக்கங்கள் பெற்று இருக்கிறேன். எந்த அதிகாரியும் ஒரு முறைகூட என் மீது குற்றம் சொன்னது கிடையாது. எனக்கு இப்போது நேரம் சரியில்லை. நான் அதிகம் பேசவிரும்பவில்லை.

கீழ்மட்ட விசாரணையிலோ, நீதிமன்றத்திலோ எனக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் மேல் முறையீடுசெய்து நான் நிரபராதி என்று நிரூபிப்பேன்.

நான் நிரபராதியாக வெளி வந்ததும் ஜெயலட்சுமியின் மோசடிகளை நூற்றுக்கும் மேற்பட்ட ஆதாரங்களோடுஅம்பலப்படுத்துவேன் என்று கூறினார்.

இவர் தான் ஜெயலட்சுமிக்கு வீட்டு வேலை செய்ய, சேலை துவைக்க, கார் ஓட்ட, காய்கறி வாங்கி வரபோலீஸ்காரர்களை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ விசாரிக்குமா?:

இதற்கிடையே ஜெயலட்சுமி வழக்கை சிபிஐ விசாரிக்கக் கூடாது என்று கோரி தென் மண்டல ஐஜி ராஜேந்திரன்தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தது. இந்தமனுவை நீதிபதி பாலசுப்பிரமணியம், நீதிபதி மாசிலாமணி ஆகியோர் விசாரித்தனர். (இந்த நீதிபதிகள் தான்மதுரை நீதிமன்றக் கிளையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டவர்கள்)

அப்போது ஜெயலட்சுமியும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வாதாடுகையில், போலீஸ் தரப்பு வாதத்தையே கேட்காமலேயே சிபிஐவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

அப்போது இடைமறித்த நீதிபதிகள், இப்படி தவறான கருத்தை தெரிவிக்கக் கூடாது. நாங்கள் சிபிஐ விசாரணைக்குஉத்தரவிடும்போது தமிழக அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் இருந்தார். ஜெயலட்சுமி விவகாரத்தில் என்னநடவடிக்கை எடு"க்கப்பட்டுள்ளது என்று கேட்டோம். ஐஜி தரப்பில் எந்த பதிலும் தரப்படவில்லை. அப்போதுசும்மா இருந்துவிட்டு இப்போது எங்கள் மீது பழி போடாதீர்கள் என்றனர்.

அரசு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ்: அது தவறு தான். ஒப்புக் கொள்கிறோம். ஆனால், ஜெயலட்சுமி தந்த புகாரின்பேரில் தமிழக காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்து அதிகாரிகளையே சஸ்பெண்ட் செய்துள்ளது.இப்போது துணை எஸ்பி தலைமையில் விசாரணையும் நடக்கிறது. 86 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

20 போலீசாருக்கு இந்த வழக்கில் தொடர்பு உள்ளது. இதில் 14 பேர் மீது துறைரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்.ராஜசேகர், இளங்கோவன், மலைச்சாமி ஆகிய அதிகாரிகள் ஜெயலட்சுமியுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளதுஉறுதியாகியுள்ளது.

ஜெயலட்சுமி மீது விபச்சார வழக்கைக் கூட பொய்யாகத் தான் போட்டுள்ளார் ராஜசேகர். இதெல்லாம் எங்கள்விசாரணையில் தெரிந்தது. தொடர்ந்து விசாரிப்போம். உரிய நடவடிக்கைகள் எடுப்போம். இதனால் சிபிஐவிசாரணையே தேவையில்லை.

ஜெயலட்சுமிக்கு நஷ்டஈடு கூட தரத் தயார். ஆனால், வழக்கு விசாரணையில் இருக்கும்போது தினமும் புதுசு,புதுசாக பத்திரிக்கைகளில் ஏதாவது குற்றச்சாட்டுக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார் ஜெயலட்சுமி. இதனால்அரசுக்கு எதிராகும் காவல்துறைக்கு எதிராகவும் மக்கள் மத்தியில் கருத்து பரவுகிறது.

இதனால் அவர் பத்திரிக்கைகளுக்குப் பேட்டியளிக்க தடை விதிக்க வேண்டும் என்றார்.

அப்போது பேசிய ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் அழகர்சாமி, ஜெயலட்சுமிக்கு தடை விதிக்கச் சொல்ல போலீசுக்குஎந்த அருகதையும் இல்லை என்றார்.

இதையடுத்துப் பேசிய நீதிபதிகள், ஜெயலட்சுமி மீதான விசாரணை எந்த அளவில் உள்ளது என்பது குறித்துபோலீசார் வரும் செவ்வாய்க்கிழமை புதிய மனு தாக்கல் செய்ய வேண்டும். அன்று இந்த வழக்கு மீண்டும்விசாரிக்கப்படும் என்று அறிவித்தனர்.

மேலும் அன்றைய தினம் ஜெயலட்சுமியும் எதிர் மனு தாக்கல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, சிபிஐ சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலட்சுமி வழக்கை முழுமையாகவிசாரிக்க வேண்டுமா அல்லது அவர் மீது போலீசார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையை மட்டும் விசாரிக்கவேண்டுமா என்று கேட்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதும் செவ்வாய்கிழமை விசாரணை நடக்கும் என நீதிபதிகள்அறிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+