விவசாயிகளுக்கு ஜெயலலிதா மேலும் சலுகை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விவசாயிகளுக்கான குறுகிய காலக் கடன்களை நீண்ட காலக் கடன்களாக மாற்றி முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய அரசு வேளாண்மைத்துறையில் உண்மையான முன்னேற்றம் காண உயர் முன்னுரிமை அளித்துவருகிறது. விவசாய உற்பத்தித்திறன், தண்ணீர் உள்ளிட்ட இடு பொருட்களின் திறமையான பயன்பாடு. குறைவானதண்ணீரே தேவைப்படக் கூடிய காட்டா மணக்கு, சர்க்கரைச் சோளம், சர்க்கரைக்கிழங்கு போன்ற பயிர்களைச்சாகுபடி செய்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு முக்கியத்தும் அளிப்பதன் மூலமே இதனை அடைய முடியும்.

நான் பதவியேற்றதும் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி வகையில் செலுத்தவேண்டிய 310.50 கோடி ரூபாயை எனது அரசு தள்ளுபடி செய்தது.

2002-- 03 ஆம் ஆண்டில் தமிழ்நாடு கடும் வறட்சியினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அப்போது 250 கோடிரூபாய் குறுகிய கால பயிர்க்கடன்களை மத்திய காலப் பயிர்க்கடன்களாக மாற்றி என்னுடைய அரசு உத்தரவிட்டது.மேலும் 61.05 கோடி ரூபாய் அளவுக்கு வட்டி மற்றும் அபராத வட்டியைத் தள்ளுபடி செய்யப்பட்டது.

2003-04-ம் ஆண்டிலும் வறட்சி ஏற்பட்டது. அதனால் 2002ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2004 மார்ச் 31ம் தேதிவிவசாயிகளுக்கு வழங்கப்பட்ட 325.56 கோடி ரூபாயையும் சேர்த்து, என்னுடைய அரசு வறட்சி நிவாரணநடவடிக்கைகளுக்காக மொத்தம் 850.44 கோடி ரூபாய் வழங்கியது.

மேலும் பயிர்க்கடன்கள் மீதான வட்டி மற்றும் அபராத வட்டி வகையில் இருந்த பாக்கித்தொகை 62 கோடிரூபாயையும் என்னுடைய அரசு தள்ளுபடி செய்தது.

விவசாயிகள் இந்த ஆண்டில் சாகுபடி பணிகளை மேற்கொண்டு நல்ல விளைச்சல் காண வேண்டும் என்றஆர்வத்துடன் இருக்கின்ற நிலையில், கூட்டுறவுக் கடன் நிறுவனங்களால் அவர்களுக்குத் தேவையான கடனைவழங்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

எனவே 2003-04-ம் ஆண்டில் பயிர்க்கடனாக 688 கோடி ரூபாய் வழங்கப்பட்டதற்கு மாறாக 2004-05-ஆம்ஆண்டில் கூட்டுறவு கடன் நிறுவனங்கள் இதனை 1037 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயிர்க்கடன்கள் மீதான வட்டி வீதம், ஆண்டு ஒன்றுக்கு 9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தஇலக்கை அடைய கூட்டுறவு வங்கிகளுக்கு ரொக்க உதவியாக 217.32 கோடி ரூபாய் தமிழக அரசு வழங்கியுள்ளது.

அதோடு 2,598 கோடி ரூபாய் அளவுக்கான குறுகிய கால பயிர்க்கடன்களை மொத்தம் 5 ஆண்டுகளுக்குள் திருப்பிசெலுத்தத்தக்க நீண்ட கால கடன்களாக மாற்றி அமைக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதன்மூலம் ஏற்கனவே பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாததால் புதிதாகக் கடன் பெறும் தகுதியை இழந்துள்ளவிவசாயிகளும் புதிதாகக் கடன் பெற முடியும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+