மன்மோகன் சிங், முஷாரப் சந்திப்பு
நியூயார்க்:
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபை மன்மோகன் சிங் இன்று சந்தித்துப் பேசினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இரு நாடுகளுக்கு இடையேயான முக்கியப் பிரச்சினைகளைபேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க இரு தலைவர்களும் உறுதி அளித்தனர். அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்குஆக்கப்பூர்வ அடிப்படை அமைப்பது குறித்தும் விவாதித்தனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின் மன்மோகன் சிங் நிருபர்களிடம் பேசுகையில், பரஸ்பர கருத்துப் பரிமாற்றத்தில் இதுஒரு புதிய அத்தியாயம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்துவோம் என்று முஷாரப் உறுதிஅளித்தார். அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றுவார் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
இந்தப் பேச்சுவார்த்தையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்காலின்பவல் கூறுகையில், பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இரு நாடுகளும் முன்வந்திருப்பதுவரவேற்கத்தக்கது என்றார்.
ஐநா சபையில் மன்மோகன் பேச்சு:
முன்னதாக காஷ்மீர் பிரச்சினையில் சுமூகமான தீர்வு காண பேச்சுவார்த்தை தொடரும் என்று ஐநா பொது சபையில்பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்தார்.
ஐநா சபையின் 59-வது பொது சபைக் கூட்டத்தில் மன்மோகன் சிங் பேசியதாவது:
பாதுகாப்பு, வளர்ச்சி உட்பட அனைத்துத் துறைகளிலும் உலக நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றன.அதை எதிர்த்துப் போராட உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும்.
தீவிரவாத இயக்கங்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. மத ரீதியான வெறுப்பு உணர்வைஏற்படுத்தி, தங்களது இயக்கத்துக்கு தீவிரவாதிகள் ஆள் சேர்க்கின்றனர். உலக அளவில் தீவிரவாதிகள்ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். ஆனால் அவர்களால் தாக்குதலுக்குள்ளாகும் ஜனநாயக நாடுகள் அந்தஅளவுக்கு ஒருங்கிணைந்து செயல்படத் தயங்குகின்றன.
ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்துப் பேசும் நேரத்தில், தீவிரவாதத்தை ஒழிக்க தகவல் மற்றும் உளவுத்தகவல்கள் பரிமாற்றம், வளங்களை ஒன்று சேர்த்தல் ஆகிய விஷயங்களில் ஒன்றுபட்டு செயல்படத்தயங்குகிறோம்.
இந் நிலை மாற வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும்.
அணு ஆயுதப் பரவலைத் தடுக்க, ரசாயன ஆயுதங்களை அழிக்க மேற்கொண்ட அதே முறையைப் பின்பற்றவேண்டும்.
ஐநா சபை ஒன்றுதான் சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரே கருவி. ஆனால், அதன்செயல்பாடுகளில் ஜனநாயக நடைமுறைகள் இல்லை. எனவே அதைத் திருத்தியமைப்பது மிகவும் அவசியம்.இந்தியா போன்ற நாடுகளை நிரந்தர உறுப்பு நாடுகளாகச் சேர்க்க வேண்டும். ஐநா சபையை உண்மையானஉலகப் பிரதிநிதியாக மாற்றுவதில் அதுதான் முதல் கட்டமாக இருக்கும்.
காஷ்மீர் உள்பட எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் ஜனவரி மாதம் முதல்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. பேச்சுவார்த்தையைத் தொடர்வதில் இரு நாடுகளும் உறுதியாகஉள்ளன.
இராக் மக்களின் வேதனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். அவர்கள் ஜனநாயக முறையில்தலைவரைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும். ஆப்கானிஸ்தானை சீரமைக்கும் பணிகளுக்கு இந்தியாதொடர்ந்து ஆதரவளிக்கும் என்று பேசினார் மன்மோகன் சிங்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications