இந்திய அணு விஞ்ஞானி ராஜா ராமண்ணா மரணம்
மும்பை:
ராஜஸ்தானின் போக்ரான் பாலைவனத்தில் நாட்டின் முதல் அணு குண்டு சோதனையை முன்னின்று நடத்தியவிஞ்ஞானியான டாக்டர் ராஜா ராமண்ணா இன்று அதிகாலை மரணமடைந்தார்.
79 வயதான ராமண்ணாவுக்கு குடல் நோய் இருந்து இருந்து வந்தது. இதையடுத்து மும்பையில் உள்ள பாம்பேஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டிருந்த அவர் மரணமடைந்தார்.
1974ம் ஆண்டு இந்தியா நடத்திய முதல் அணு குண்டு சோதனையில் முக்கிய பங்கு வகித்தவர் ராமண்ணா.
இந்திய அணு சக்திக் கமிஷனின் தலைவராகவும், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராகவும் ராஜ்யசபாஎம்பியாகவும் இருந்த ராமண்ணா சிறந்த கல்வியாளர், பியானே இசைப்பதிலும் ஆர்வம் கொண்டவர்.
வி.பி.சிங் பிரதமரானபோது இவரை பாதுகாப்புத்துறை இணையமைச்சராக்கினார். நாட்டின் மிக உயரிய விருதானபத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை வென்றனர்.
பெங்களூரில் உள்ள உயர் கல்விக்கான தேசிய மையத்தின் கெளரவ இயக்குனராக இருந்து வந்தார் ராஜாராமண்ணா. பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
அணு ஆராய்ச்சி தொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கி வந்தவர். இரண்டாவதுமுறையாக இப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் தலைமையில் இந்தியா அணு குண்டு சோதனைநடத்தியபோதும், மத்திய அரசுக்கும் விஞ்ஞானிகளுக்கும் வழிகாட்டியாக இருந்தவர் ராஜா ராமண்ணா.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக் கழகமான டி.ஆர்.டி.ஓவின் டைரக்டர் ஜெனரலாக இருந்தவர்,
இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications