அணு விஞ்ஞானிகள் அதிர்ச்சி, இரங்கல்
மும்பை:
ராமண்ணாவின் மறைவுக்கு மூத்த அணு விஞ்ஞானிகள் பலரும் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
போக்ரானில் டாக்டர் அப்துல் கலாம் தலைமையில் இந்தியா இரண்டாவதாக நடத்திய அணு குண்டு சோதனையில்முக்கிய பங்காற்றிய இந்திய அணு ஆராய்ச்சிக் கமிஷனின் தலைவரான டாக்டர் அனில் ககோத்கர் கூறுகையில்,
இந்திய அணு ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து வழிகாட்டி வந்தவர் ராமண்ணா.அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கும், நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள பெரும் இழப்பாகும்.
உள்நாட்டிலேயே அணு உலையை டிசைன் செய்வது, கட்டுவது என பல ஆராய்ச்சிகளையும் சாதனைகளையும்புரிந்தவர் என்றார்.
இந்தியாவின் இரண்டாவது அணு குண்டு சோதனையில் முக்கிய பங்கு வகித்த இன்னொரு விஞ்ஞானியான மத்தியஅரசின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் சிதம்பரம் கூறுகையில்,
இந்திய அணு ஆராய்ச்சியின் தந்தை டாக்டர் ஹோமி பாபாவுடன் பணியாற்றியவர் ராமண்ணா. அணுஆராய்ச்சியில் மிகச் சிறந்த மூளையை இந்தியா இழந்துவிட்டது. விஞ்ஞானியாக மட்டுமல்லாமல்,விஞ்ஞானிகளை உருவாக்குவதிலும் வல்லவர் அவர் என்றார்.
அணு சக்தித் துறையின் முன்னாள் தலைவரான டாக்டர் பி.கே. ஐயங்கார் கூறுகையில்,
அடிப்படை இயற்பியல் ஆராய்ச்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட ராமண்ணா அதற்காக பெங்களூரில் உயர்கல்விக்கான தேசிய கழகத்தைத் துவக்கினார். மிகச் சிறந்த நாட்டுப் பற்றாளர் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications