ஜெயலட்சுமி: சிபிஐ விசாரிக்குமா? தீர்ப்பு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Jayalakshmi ஜெயலட்சுமி வழக்கை சிபிஐ விசாரிக்கத் தடை கோரி தமிழக காவல்துறை தாக்கல் செய்துள்ள மனு மீதானவிசாரணை இன்று முடிவடைந்தது. ஆனால், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

ஜெயலட்சுமி விவகாரத்தில் ஏராளமான அதிகாரிகள், போலீஸார் சம்பந்தப்பட்டிருப்பதால் அவரது வழக்கை சிபிஐவிசாரிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் பாலசுப்ரமணியம், மாசிலாமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச்உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தென் மண்டல காவல்துறை தலைவர் ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார். அதில் தமிழககாவல்துறையே இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், சிபிஐ விசாரிக்க விதிக்கப்பட்டஉத்தரவை ரத்து செய்யுமாறும் கோரியிருந்தார்.

இந்த மனு மீது நீதிபதிகள் பாலசுப்ரமணியம், மாசிலாமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி வருகிறது.

இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்நாகேஸ்வரராவ், ஜெயலட்சுமி விவகாரம் தொடர்பாக கூடுதல் எஸ்.பி. ஆறுமுகம் தீவிர விசாரணை நடத்திவருகிறார் என்றார்.

பின்னர், ஆறுமுகம் இதுவரை நடத்தியுள்ள விசாரணையின் முழு விவரம், அதன் அடிப்படையில் இதுவரைஎடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவை குறித்து குறித்த அறிக்கையை நீதிபதிகளிடம் நாகேஸ்வரராவ்தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து, ஜெயலட்சுமி வழக்கில் தமிழக காவல்துறை தரப்பில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளதை ரத்து செய்யவேண்டும் என்று ராவ் வாதிட்டார்.

Jayalakshmi இதற்கு ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் அழகர் சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நீதிமன்றத்தின் கவனத்தைத் திசைதிருப்பி, சிபிஐ விசாரணையைத் தடுக்கவே இந்த அறிக்கை புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழககாவல்துறை வசம் ஜெயலட்சுமி வழக்கை ஒப்படைத்தால் அதில் நியாயம் இருக்காது.

ஏற்கனவே ஏட்டு கண்ணன், உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன் என ஜெயலட்சுமியை மிரட்டியுள்ளார்.எனவே ஜெயலட்சுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும் என்று வாதிட்டார்.

இந் நிலையில் சிபிஐ தரப்பில் புதிதாக ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிபிஐயில் துணை இயக்குனர்என்ற பதவி இல்லை. ஆனால், அந்தப் பதவியில் இருக்கும் அதிகாரி தான் விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. இதில் எங்களுக்கு போதிய விளக்கம் தேவை என்று கூறப்பட்டிருந்தது.

இந்த முத்தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் என்று கூறி தேதிகுறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

கடந்த முறை சென்னையில் விசாரணை நடந்தபோது நேரில் வந்திருந்த ஜெயலட்சுமி இன்று ஆஜராகவில்லை.அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று வருவதில் பல பிரச்சனைகள் உள்ளதால் அவர் வரவில்லை என அவரதுவழக்கறிஞர் அழகர்சாமி தெரிவித்தார்.

ஜெயலட்சுமியின் தந்தை மனு:

இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றக் கிளையில் ஜெயலட்சுமியின் தந்தை அழகிரிசாமி இன்று ஒரு மனுதாக்கல் செய்தார். அதில்,

எனது குடும்பத்தினரை இன்ஸ்பெக்டர் இளங்கோவன் கடத்தியது தொடர்பாக தென் மண்டல ஐஜி ராஜேந்திரனைசந்தித்து மனு கொடுத்தோம். ஆனால், அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் பின்னரே உயர் நீதிமன்றதலைமை நீதிபதிக்கும், உள்துறைச் செயலாளரிடமும் புகார் கொடுத்தோம்.

உள்துறைச் செயலாளர் உத்தரவிட்ட பின்னரே தென் மண்டல ஐஜி விசாரணையை ஆரம்பித்தார். அவர்நேர்மையான, கடமை தவறாக அதிகாரியாக இருந்திருந்தால் நான் புகார் கொடுத்தவுடனேயே நடவடிக்கைஎடுத்திருப்பார். ஆனால், அவர் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகளை காப்பாற்றவே முயன்றார்.

இதனால் தான் அவரது கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணையை நீதிமன்றம் வாபஸ் பெறக் கூடாது என்றுகூறியுள்ளார் அழகிரிசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+