காவிரி மன்றத்தில் தமிழகம், கர்நாடகம் மோதல்
டெல்லி:
காவிரி நடுவர் மன்றத்தில் தமிழ்நாடு மற்றும் -கர்நாடக வழக்கறிஞர்கள் இடையே கடுமையான விவாதம்நடைபெற்றது.
நடுவர் மன்றத்தின் தலைவர் சிங்குக்கும் அதன் இரு உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள்வெடித்துள்ள நிலையில் இதன் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. உறுப்பினர்கள் இருவரும் தமிழக, கர்நாடகஅணைகளைப் பார்வையிடக் கிளம்ப, அதைத் தடுத்தார் சிங். இதையடுத்து சிங் மீது தமிழகம் அதிருப்தியில்உள்ளது.
இந் நிலையில் நேற்று மன்றக் கூட்டம் தொடங்கியதும், அக்டோபரில் விசாரணையை எப்போது வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசனை நடந்தது. அக்டோபர் 12-ம் தேதி எங்களுக்கு சாதகமாக இருக்காதுஎன்று தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் தெரிவித்தார்.
ஆனால், தேதியை மாற்ற முடியாது என்று நடுவர் மன்றத் தலைவர் நீதிபதி என்.பி. சிங் கூறினார்.
1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தை தமிழகம் மீறிவிட்டதாக கர்நாடகம் புகார் கூறியது. அதை மறுத்த வைத்தியநாதன்,அந்தப் புகாருக்கு விரிவாக பதிலளித்தார். மேலும், பிரச்சினையை நடுவர் மன்றத் தலைவர் முழுமையாகப்புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை என்றும், ஏற்கெனவே தலைவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டாரா? என்றும்கேட்டார்.
அதற்கு நடுவர் மன்றத் தலைவர் ஆட்சேபம் தெரிவித்தார். இந்த நிலையில் நான் எப்படி முடிவெடுக்க முடியும்என்றார் அவர்.
அப்படியானால், தலைவர் என்பதற்குப் பதிலாக நடுவர் மன்றம் என்று குறிப்பிடலாமா? என்று வைத்தியநாதன்கேட்டார். அதை நடுவர் மன்ற உறுப்பினர் என்.எஸ். ராவ் ஆட்சேபித்தார்.
அப்போது, கர்நாடக வழக்கறிஞர் அனில் திவான் தனக்கு அருகில் இருந்த மற்றொரு கர்நாடக வழக்கறிஞரிடம் ,அச்சுறுத்தும் பாணியில் விசாரணை நடப்பதாகக் கூறினார்.
அதற்கு கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தார் வைத்தியநாதன்.
தொடர்ந்து வைத்தியநாதன் பேசுகையில், நடுவர் மன்றத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று தமிழகம்நீதிமன்றத்துக்குச் செல்லவில்லை. கர்நாடகம் தான் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. தமிழகம் மீது குற்றம் சொல்லகர்நாடகத்துக்கு உரிமை இல்லை. கண்ணாடிக் கூண்டுக்குள் இருப்பவர்கள் கல்லெறியக் கூடாது என்றார்.
இதனையடுத்து இரு தரப்ப வழக்கறிஞர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. அதனால் 10நிமிடங்களுக்கு முன்னததாகவே விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இன்றும் விசாரணை நடைபெறுகிறது.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications