முகமது அலி ஜாமீனில் விடுதலை
சென்னை:
போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சிபிசிஐடி முன்னாள் டி.ஐ.ஜி. முகமது அலி, உதவிபோலீஸ் கமிஷனர் சங்கர், மதுரை எல்.ஐ.சி. அதிகாரி ராமசாமி சாது ஆகியோருக்கு சென்னை எழும்பூர் கூடுதல்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.
போலி முத்திரைத் தாள் வழக்கில் மூவரும் கைது செய்யப்பட்டு இன்றுடன் 90 நாட்கள் ஆகிறது. இவர்களது ஜாமீன்மனுக்கள் பலமுறை, பல நீதிமன்றங்களால் தளளுபடி செய்யப்பட்டுவிட்டன.
இந் நிலையில் இவர்கள் மீண்டும் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்கள் மீது இன்று சென்னை எழும்பூர் கூடுதல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. நீதிபதி அருள்ராஜ் இவற்றை விசாரித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,
கைது செய்து இவ்வளவு நாட்கள் ஆகியும் இவர்கள் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனவேஇவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ஜேக்கப் டேனியல், இந்த வழக்கில் தமிழக அரசு எங்களுக்கு போதியஒத்துழைப்பு தரவில்லை. இதனால் தான் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அருள்ராஜ்,
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி அருள்ராஜ், கைது செய்யப்பட்டு 90 நாட்களை இவர்கள் சிறையில் கழித்துவிட்டதாலும் அவர்கள் மீது இன்னும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததாலும், மூவரையும் ஜாமீனில்விடுதலை செய்வதாக அறிவித்தார்.
அப்போது சிபிஐ வழக்கறிஞர் ஜேக்கப் டேனியல் குறுக்கிட்டு, 3 பேர் மீதும் லஞ்சப் புகார் இருப்பதால் அவர்களைபெங்களூரில் வைத்து விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே 3 பேரையும் பெங்களூரில் தங்கியிருக்குமாறுநிபந்தனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இது குறித்து பரிசீலித்து மாலையில் முடிவை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
போலி முத்திரைத் தாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் தெல்கியின் தலைமையகமாக விளங்கியது பெங்களூர் தான்என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications