For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழறிஞருக்கு சீனா நட்புறவு விருது

By Staff
Google Oneindia Tamil News

பெய்ஜிங்:

Kadigachalam getting the award from Dy premier of Chinaசீனாவின் பன்னாட்டு வானொலியின் தமிழ் சேவை அறிவிப்பாளரும், தமிழறிஞருமான கடிகாசலத்துக்கு அந்நாட்டு அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது.

கடந்த 12 வருடங்களாக சீன பன்னாட்டு வானொலியின் (China Radio International) தமிழ் சேவைநிகழ்ச்சிகளுக்கு அறிவிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் கடிகாச்சலம்.

தற்போது சென்னை தமிழ்க் கல்விக்கான சர்வதேச மையத்தின் இணை பேராசிரியராக உள்ள கடிகாசலம், சீனபுராதன கதைகள், சீன உணவு வகைகள் மற்றும் அந் நாட்டின் கலாச்சாரம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை சீனதமிழ் வானொலியில் அறிமுகப்படுத்தியவர்.

இவரது சிறப்பான ஒலிபரப்பு சேவையால் கவரப்பட்ட இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள்வருடத்திற்கு சுமார் இரண்டு லட்சம் கடிதங்களை சீன வானொலிக்கு அனுப்பி வருகின்றனர். இதன் மூலம் சீனபன்னாட்டு வானொலியில் மற்ற மொழி ஒலிபரப்பு சேவைகளை விட தமிழ்த் சேவை மிகவும் புகழ் பெற்றுவிளங்குகிறது.

கடிகாச்சாலத்தின் இந்தச் சேவையைப் பாராட்டும் விதமாக சீன அரசு இவருக்கு, நட்புறவாளர் விருது வழங்கிகெளரவப்படுத்தியுள்ளது. இவருடன் மேலும் 84 பேருக்கும் இந்த நட்புறவு விருதை சீனா வழங்கியுள்ளது.

பெய்ஜிங்கில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில், சீன துணை அதிபர் ஹூ லியாங்கு இந்த விருதுகளைவழங்கினார்.

இந்த விருது குறித்து கடிகாச்சலம் கூறுகையில், எனது சேவையை சீன அரசு அடையாளம் கண்டு கொண்டுசிறப்பித்தது மகிழ்ச்சியளிக்கிறது. வருங்காலத்தில் சீன பன்னாட்டு வானொலியின் தமிழ் சேவை மேலும்பிரபலமடையும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது என்றார்.

இவர் சீன இலக்கியங்கள் பலவற்றையும் தமிழாக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X