மாநிகராட்சி கூட்டம்: திமுக கவுன்சிலர்கள் வெளியேற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சியின் 7-வது வார்டுக்கு நடந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்சண்முகம் பதவியேற்றதை கண்டித்து கோஷமிட்ட திமுக கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

சென்னை மாநகராட்சியின் கூட்டம் இன்று நடந்தது. காலையில் கூட்டம் தொடங்கியதும், சமீபத்தில் 7வதுவார்டுக்கு, வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவைச்சேர்ந்த சண்முகம் பதவியேற்றார்.

அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் கோஷமிட்டனர். ஜனநாயகத்தைக் கொன்றுகுழி தோண்டிப் புதைத்து விட்டு அதிமுக இந்தப் பதவிக்கு வந்திருப்பதாக கூறி அவர்கள் கோஷமிட்டனர்.

இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரையும் அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேவிட்டனர். இதைக் கண்டித்து காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்டகட்சிகளின் கவுன்சிலர்களும் வெளிநடப்புச் செய்தனர். பின்னர் அனைவரும் மாநகராட்சி வளாகத்தில் அமர்ந்துதர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து திமுக மாநாகராட்சி தலைவர் சி.வி.மலையன் கூறுகையில்,

7வது வார்டில் நடந்த தேர்தலின் போது, திமுக வேட்பாளர் முத்துகிருஷ்ணன் கத்தியால் தாக்கப்பட்டார்.வழக்கறிஞர் கல்யாணசுந்தரம் பலமாகத் தாக்கப்பட்டார். இந்த வன்முறைச் சம்பவங்களை உயர் நீதிமன்றமேகண்டித்துள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

இந் நிலையில், சண்முகம் வெற்றி பெற்றதாகக் கூறி பதவிப் பிரமாணம் செய்து வைக்க எவருக்கும் தார்மீக உரிமைகிடையாது. அதிமுகவின் இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கை திமுக சார்பில் நான் வன்மையாகக்கண்டிக்கிறேன் என்று கூறினார்.

தீர்மானத்தை நீக்க கோரி வழக்கு

இந் நிலையில் சென்னை மாநகராட்சி மன்றத்தில் திமுக தலைவர் கருணாநிதி மீது கொண்டு வரப்பட்டுள்ளகண்டனத் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக மாநகராட்சி தலைவர் சி.வி.மலையன், காங்கிரஸ் தலைவர் மனோ ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கருணாநிதி கடந்த ஜூலை மாதம் தனது சட்டமன்றத் தொகுதியான சேப்பாக்கத்தில் மாநகராட்சிப் பள்ளிக் கூடகட்டடத்தைத் திறந்து வைத்தார். இதற்கு மாநகராட்சியிடம் முறையாக அனுமதியும் பெறப்பட்டிருந்தது.

திறப்பு விழாவுக்கு துணை மேயர் கராத்தே தியாகராஜன் அழைக்கப்படவில்லை. இதன் காரணமாக, ஜூலை 28ம்தேதி சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானத்தை துணை மேயர் கராத்தே தியாகராஜன்கொண்டு வந்தார்.

அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் கராத்தே தியாகராஜன் பள்ளிக் கூட திறப்பு விழாவுக்கு அழைக்கப்படவில்லை.அவரை அழைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி திமுக தலைவர்கருணாநிதி மீது கண்டனத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார்.

இந்த கண்டனத் தீர்மானத்தை நீக்க வேண்டும் என்று கோரி மாநகராட்சி ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டது.ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உயர் நீதிமன்றம் இதில் தலையிட்டு எங்களதுமனுவைப் பரிசீலித்து உரிய உத்தரவைப் பிறப்புக்குமாறு மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என்றுமனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+