கமல் தலைமையில் ரஜினி பட தொடக்க விழா
சென்னை:
ரஜினி நடிக்கும் சந்திரமுகி படத் தொடக்க விழாவிற்கு கமல் தலைமையேற்கவுள்ளார்.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கான தொடக்க விழா, நாளை காலை தி.நகர் போக் ரோட்டில்உள்ள சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டில் நடைபெறுகிறது.
கமல் இந்த விழாவிற்கு தலைமையேற்றால் நன்றாக இருக்கும் என்று விருப்பப்பட்ட பிரபு, இது குறித்துரஜினியிடம் பேச, அவரும் ஓ.கே. சொல்லிவிட கமலுக்கு அழைப்பு போய்விட்டது.
சந்திரமுகி படம் குறித்து சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் கூறுகையில்,
ஒரு நாள் ரஜினி எனக்கு போன் செய்தார். என்ன பண்றீங்க என்று கேட்டார். டிவி சீரியல் எடுத்து வருகிறேன்என்று கூறினேன். உடனே ரஜினி, நாம ஒரு படம் பண்ணலாமா என்று கேட்டார். நானும் சரி என்று சொன்னேன்.
ரஜினி என்னிடம், இயக்குநர் பி.வாசு சொன்ன கதை எனக்குப் பிடித்துள்ளது. அதையே படமாக எடுத்துவிடுவோம். அவரே இயக்கட்டும். வாசுவிடம் சொல்லி விடுங்கள் என்றார்.
மன்னன் படத்திற்குப் பிறகு நாங்கள் எல்லாம் சேர்ந்து படம் பண்றோம். நிச்சயம் அந்தப் படத்தை விட பத்துமடங்கு வெற்றிப் படமாக இது வரும். தமிழ்ப் புத்தாண்டில் ரிலீஸ் செய்கிறோம்.
படத்தில் ஒரு கேரக்டரை பிரபுதான் செய்யவேண்டும் என்று ரஜினி கேட்டுக் கொண்டார். அதனால் அந்தகேரக்டரில் பிரபு நடிக்கிறார். வித்யாசாகர் இசையமைக்கிறார். சேகர் ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார். மற்றநடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்றார் ராம்குமார்.
இதற்கிடையே இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ஜக்குபாய் படம் தொடர்பாக எனது உதவியாளர்களுடன் கதைவிவாதம் செய்து கொண்டிருந்தேன். ரஜினியின் புதிய படம் பற்றிய அறிவிப்பை பத்திரிகைகளில் பார்த்துதான்தெரிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.
சிவாஜியின் குடும்பத்தினர் பொருளாதாரரீதியில் சிரமத்தில் இருப்பதால், ரஜினியே முன் வந்து இந்தப் படத்தைநடித்துத் தர முன் வந்ததாகவும் செய்திகள் வருகின்றன. படத்தை வாங்க இப்போதே வினியோகஸ்தர்கள் பலரும்ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டனர்.
இப்போதே அவர்கள் பெரும் விலை பேச ஆரம்பித்துவிட்டதல், ரஜினிக்கு மிகப் பெரிய சம்பளம்கொடுக்கப்பட்டாலும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கும் பெரிய அளவில் பணம் தேறும் என்றும்கருதப்படுகிறது.
சிவாஜி பிறந்த நாள் விழா:
நாளை மாலை சிவாஜியின் 77வது பிறந்த நாள் விழாவை சென்னை மியூசிக் அகாடமியில் சிவாஜி குடும்பத்தினர்பிரம்மாண்டமாக கொண்டாடுகின்றனர். இதற்கு மத்திய அமைச்சர் சுனில் தத் தலைமை வகிக்கிறார். இந்தவிழாவிலும் கமல் பங்கேற்கிறார்.
மேலும் சிவாஜியின் பிறந்த நாள் விழாவை அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றம் சிறப்பாக கொண்டுகிறது. 9ம்தேதி வால்டாக்ஸ் சாலையில் நடைபெறும் விழாவில் மத்திய அமைச்சர் இளங்கோவன் கலந்து கொள்கிறார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications