டிவி தொடர்களில் நடிக்க அரசு ஊழியர் வழக்கு
சென்னை:
தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க அரசு தடை விதித்துள்ளதை எதிர்த்து தமிழக வீட்டு வசதி வாரிய ஊழியர்சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பணியாற்றி வருபவர் பூச்சி முருகன். இவர் வீட்டு வசதி வாரியத் தொழிலாளர்முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழ்நிாடு வீட்டு வசதி வாரியவருங்கால வைப்பு நிதிக் குழு உறுப்பினராக நான் இருந்து வருகிறேன்.
மறைந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஆகியோருடன் எனது தந்தை சிவசூரியன் பல படங்களில் நடித்துள்ளார்.இதேபோல எனக்கும் நடிப்பார்வம் உள்ளது. சில தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.
இதற்காக வீட்டு வசதி வாரிய இயக்குநருக்கு, நடிப்பதற்கு அனுமதி கோரி கடிதம் எழுதினேன். ஆனால் பதில்வரத் தாமதமானதால் 6 மாதம் பொறுமையாக காத்திருந்து விட்டு டிவி தொடரில் நடிக்க ஆரம்பித்தேன்.
இதற்காக எனக்கு துறை ரீதியிலான மெமோ கொடுக்கப்பட்டது. என் மீது விசாரணை நடத்துவதற்காக சுஜாதாஎன்ற அதிகாரி நியமிக்கப்பட்டார். விசாரணையின்போது என்னுடன் வழக்கறிஞரை வைத்துக் கொள்ள அனுமதிகோரி செப்டம்பர் 9ம் தேதி கடிதம் அனுப்பினேன். ஆனால் அந்தக் கடிதத்தை விசாரணை அதிகாரி சுஜாதாநிராகரித்து விட்டார்.
இந்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். என்னை தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கஅனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் பூச்சி முருகன்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன், விசாரணை அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிப்பதாகவும்,மனுதாரரின் கோரிக்கையை உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிஉத்தரவிட்டார்.
பூச்சி முருகன், கே டிவியின் அடடா அமர்க்களம் தொடரில் சில பகுதிகளில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications