2 இந்திய அணு விஞ்ஞானிகளுக்கு யு.எஸ். தடை
வாஷிங்டன்:
அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தயாரிக்க ஈரானுக்கு உதவி செய்ததாக இரு இந்திய விஞ்ஞானிகள் மீதுஅமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
அவர்களுடன் அமெரிக்க ஆய்வு நிறுவனங்கள் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அந் நாட்டுவெளியுறவுத்துறை தடை விதித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பெளஷர் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் செளத்ரி சுரேந்தர், டாக்டர் ஒய்.எஸ்.ஆர். பிரசாத் ஆகியோர் மீது ஈரான் அணுஆயுதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த இருவர் தவிர, சீனாவைச் சேர்ந்த 7 அணு மற்றும் ஏவுகணை ஆராய்ச்சி நிறுவனங்கள், ஒரு ரஷ்ய அணுஆராய்ச்சி நிறுவனம், உக்ரைன், ஸ்பெயின், பெலாரஸ், வட கொரியாவைச் சேர்ந்த தலா ஒரு நிறுவனங்களுக்கும்தடை விதிக்கப்பட்டுள்ளது.
1999ம் ஆண்டு முதலே ஈரானுக்கு அணு மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை இவர்கள் வழங்கி வந்துள்ளதுஉறுதியாகியுள்ளது என்றார்.
யார் இந்த பிரசாத்?:
அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டுள்ள டாக்டர் ஒய்.எஸ்.ஆர். பிரசாத், டாக்டர் செளத்ரி சுரேந்தர் ஆகியஇருவரும் மூத்த இந்திய அணு விஞ்ஞானிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூக்ளியர் கார்பொரேசன் ஆப் இந்தியா லிமிடெட் (கஇஐஃ) என்ற அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகஇருந்தவர் தான் பிரசாத். 2003ம் ஆண்டில் இவர் பதவி ஓய்வு பெற்றார். இதன் பின்னர் ஈரானின் அட்டாமிக்எனெர்ஜி ஆர்கனைசேனின் பணியில் சேர்ந்தார்.
ரஷ்யா அணு ஆராய்ச்சி நிறுவனங்களுடனும் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள பிரசாத், ஈரானுக்கு அவர்களதுஉதவிகளையும் பெற்றுத் தந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
நியூக்ளியர் கார்பொரேசன் ஆப் இந்தியா லிமிடெட் தலைவர் பதவியில் இருந்து பிரசாத் ஓய்வு பெற்றதையடுத்துஅந்தப் பதவிக்கு வந்தவர் தான் டாக்டர் செளத்ரி சுரேந்தர். இவரும் ஈரானுக்கு உதவியதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications