வறட்சி: ரூ. 228.53 கோடி கூடுதலாக கோரும் தமிழகம்
சென்னை:
தமிழகத்தில் வறட்சி நிலை குறித்து ஆய்வு நடத்திய மத்தியக் குழுவிடம் கூடுதலாக ரூ. 228.53 கோடி நிதியுதவிஅளிக்குமாறு மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக ஆய்வு நடத்திய மத்தியக் குழுவினர் நேற்றிரவு தலைமைச் செயலகத்தில் உயர்அதிகாரிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினர்.
அப்போது வறட்சி நிலையை சமாளிக்க ஏற்கனவே கோரப்பட்ட ரூ. 1,680 கோடி நிதியுதவியோடு மேலும் ரூ.228.53 கோடியை அளிக்குமாறு தமிழக அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.
இதன்மூலம் தமிழக அரசு மொத்தம் ரூ. 1,909 கோடி மத்திய நிதியுதவியைக் கோரியுள்ளது. இதில் குறுவைசாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ 132.84 கோடியையும், சென்னையில் குடிநீர்வழங்க ரூ. 37.07 கோடியையும் ஒதுக்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வறட்சியால் பட்டுப் போன பனை மரத் தொழிலாளர்களுக்கு உதவ ரூ. 58.62 தேவைப்படுவதாகவும் தமிழக அரசுகூறியுள்ளது.
தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனைகளை முடித்துக் கொண்டு மத்திய வறட்சி நிவாரணக் குழுவினர் 8 பேரும்நேற்றிரவே டெல்லி திரும்பி விட்டனர். அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்துக்குத்தேவையான நிவாரணத் தொகையை மத்திய அரசு ஒதுக்கும்.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்!












Click it and Unblock the Notifications