ஜெ- சசி ஹைதராபாத் பயணம்: ஒரு வாரம் ஓய்வு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா நேற்று தனது தோழி சசிகலாவுடன் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள தனதுதிராட்சை தோட்டத்தில் இருவரும் ஒரு வாரம் ஓய்வெடுக்கின்றனர்.
இன்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்த ஜெயலலிதா, சென்னைக்கு கிருஷ்ணா நீரை விடுவிக்குமாறுநேரில் கோரிக்கை விடுத்தார். அதை ரெட்டி ஏற்றுக் கொண்டார்.
சுமார் 30 நிமிடங்கள் நடந்த இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா,
பேச்சுவார்த்தை மிக சுமூகமாகவும், நம்பிக்கை தரும் வகையிலும் அமைந்திருந்தது. தமிழகத்துக்கு இன்று முதல்10,000 கன அடி நீரைத் திறந்துவிடுவதாக ரெட்டி உறுதியளித்தார். 1983ம் ஆண்டு தமிழகமும் ஆந்திரமும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தமிழகத்துக்கு ஆந்திரா ஆண்டுக்கு 15 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும் என்றார்.
முன்னதாக நேற்று தனி விமானத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் செல்ல, உயர் அதிகாரிகள் வேறு விமானத்தில்ஹைதராபாத் சென்றனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று, தமிழகத்திற்கு வரும் 15 தேதிக்குள் தண்ணீர் திறந்து விடராஜசேகர ரெட்டி ஏற்கனவே உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இதே கோரிக்கையுடன் ஜெயலலிதாஅவரை சந்தித்தார்.
ஜெயலலிதாவும் சசிகலாவும் ஹைதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டத்தில் ஒரு வாரம் ஓய்வெடுக்கின்றனர்.
ரத்ததான தினம்: ஜெ. வேண்டுகோள்
ரத்த தான தினமான இன்று அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும், உயிர்களைக் காப்பாற்ற உதவவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆண்டுதோறும் அக்டோபர் 1ம் தேதி ரத்த தான தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்வர்ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில்,
உயிர் காக்கும் ஒப்பற்ற திரவம் ரத்தம். எனவே தான் எத்தனையோ தானங்கள் இருந்தாலும் ரத்த தானம் தலைசிறந்த தானமாக உலகெங்கும் போற்றப்படுகிறது.
பணத்திற்காக ரத்த தானம் செய்வது என்ற நிலை மாறி, தமிழகத்தில் தற்போது தன்னார்வ ரத்த கொடையாளர்களின்எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழகம் இரண்டாம் இடம்வகிக்கிறது.
ரத்த தானம் என்பது ஒர் இயக்கமாக மாற வேண்டும். ரத்தக் கொடையாளர்கள் உயிர் காப்பவர்கள். ஆதலால்உங்கள் மனித நேயத்தை உங்கள் ரத்த தானத்தால் வெளிப்படுத்துங்கள் கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications