நடிகர் சங்கப் பதவி: சரத்குமார் திடீர் விலகல்
திருநெல்வேலி:
நடிகர் சங்க பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக சரத்குமார் திடீரென்று அறிவித்துள்ளார்.
நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டபோது, அவருடன் பொதுச் செயலாளராக சரத்குமாரும், துணைத்தலைவராக நெப்போலியனும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது மூவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஆனால் காலப் போக்கில்விஜயகாந்த்துக்கும், சரத்குமாருக்கும் இடையிலான நட்பில் விரிசல் ஏற்பட்டது.
இருவரும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும் பனிப் போர் நடந்து வந்தது.
இந் நிலையில் சமீபத்தில் சென்னையில் நடிகர், நடிகைகள் மற்றும் திரைத் துறையினர் திருட்டு விசிடிக்கு எதிராக மாபெரும்பேரணி நடத்தி விஜயகாந்த் தலைமையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.
திரைத் துறையினரின் கோரிக்கைகளை பரிசீலித்த ஜெயலலிதா உடனடியாக திருட்டு விசிடிக்கு எதிராக கடுமையானஅறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் பல சலுகைகளையும் வழங்கினார். திரையலகினர் இந்த அறிவிப்புகளால் இன்பஅதிர்ச்சிக்கு ஆளாகினர்.
ஜெயலலிதாவை விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்துத் திரையுலகினரும் பாராட்டியுள்ளனர். சூட்டோடு சூடாக, நடிகர் சங்கப்பொன்விழாவை ஜெயலலிதா தலைமையில் நடத்தவும் விஜய்காந்த் முடிவு செய்துள்ளார்.
இந்த நிகழ்வுகளால் அதிர்ச்சி அடைந்துள்ள திமுகவைச் சேர்ந்த சரத்குமார், தனது நடிகர் சங்கப் பதவியை ராஜினாமா செய்வதாகஅறிவித்துள்ளார். திருநிெல்வேலியில் ஐயா படப்பிடிப்பில் உள்ள அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இது நாள் வரையிலும் நேர்மையாக உழைத்து, சங்கக் கடனை அடைப்பதற்காக கொடுத்தவாக்குறுதியை நிறைவேற்றிட நான் அயராது செயலாற்றி வந்தது அனைவரும் அறிந்ததே.
கடந்த சில மாதங்களாக நிர்வாகத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் எனக்கு மன நிறைவை அளிக்கவில்லை. இருந்தாலும்தலைமைக்குக் கட்டுப்பட்டு சங்கம் எந்த இடையூறுக்கும் தள்ளப்படாமல் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை மனதில்கொண்டு அமைதியாக இருந்து வந்தேன்.
எனக்கு இருக்கின்ற திரையுலகப் பணிகளுடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும், சங்க பொதுச் செயலாளர் பதவியையும்ஒருங்கிணைத்து வேலைப் பளுவை தாங்கி கவனத்தை சங்கத்தின் பால் அதிக நேரம் செலவிட முடியவில்லை.
இந்த காரணத்தினால் இன்று முதல் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளற் பதவியை மனத் தாங்கலுடன், மனவேதனையுடன் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் ராஜினாமா செய்கிறேன்.
இருப்பினும் நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினராக தொடர்ந்து நீடிப்பேன். சங்கத்தின் வளர்ச்சிக்காக இறுதி வரை பாடுபடுவேன்என்று கூறியுள்ளார் சரத்குமார்.
விஜயகாந்த்துடனான பனிப்போர் முற்றியதும், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகம் திரும்பிக் கொண்டிருப்பதுமேசரத்குமான் விலகலுக்குக் காரணம் என கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.
-
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட்












Click it and Unblock the Notifications