அஸ்ஸாம் குண்டு வெடிப்பு: உதவ முன் வரும் யு.எஸ்

Subscribe to Oneindia Tamil

கெளஹாத்தி:

அஸ்ஸாம் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் வட கிழக்கு மாநிலங்களில் இன்று பந்த் நடத்தப்பட்டு வருகிறது.இதனால் அனைத்து மாநிலங்களிலுமே இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நாகாலாந்திலும் அஸ்ஸாமிலும் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதல்கள் குறித்தவிசாரணைக்கு உதவ அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பு முன் வந்துள்ளது.

அஸ்ஸாமில் ராணுவத்திற்கு அதிக அதிகாரம் தரப்பட்டதைக் கண்டித்தும், தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்குஎதிராகவும் இன்று பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பந்த்துக்கு அஸ்ஸாம் தவிர, அருணாசல பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் ஆகியமாநிலங்களிலும் பெருமளவு ஆதரவு கிடைத்துள்ளது. இம் மாநிலங்கள் முழுவதும் கடைகள், பள்ளிகள், வங்கிகள்,கல்லூரிகள் மூடப்பட்டுள்ளனர்.

சாலைகளில் போக்குவரத்தும் மிகக் குறைவாகவே உள்ளது. வட கிழக்கு மாநிலங்களுக்குச் செல்லும் பலரயில்களும் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

பேச்சு நடத்த தீவிரவாத அமைப்பு தயார்:

இதற்கிடையே மத்திய அரசுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக தேசிய ஜனநாயக போடோலாந்து முன்னணிதீவிரவாத அமைப்பு முன் வந்துள்ளது. இந்த அமைப்பினரும் உல்பாவும் இணைந்து கடந்த மூன்று நாட்களாகநடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 66க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

இந் நிலையில் மணிப்பூரில் நேற்றிரவு 4 வாலிபர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

அமெரிக்க உதவி:

இதற்கிடையே அஸ்ஸாம், நாகாலாந்தில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைக்கு உதவத்தயாராக இருப்பதாக அமெரிக்காவின் பெடரல் பீரோ ஆப் இன்வஸ்டிகேசன் கூறியுள்ளது.

இத் தகவலை அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய் தெரிவித்தார். மத்திய அரசிடமும் அமெரிக்கா இது குறித்துப்பேசி வருவதாகவும், அவர்களது உதவியை நாம் பெற வேண்டும் என்றும் கோகோய் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+