இயற்பியல்: 3 அமெரிக்கர்களுக்கு நோபல் பரிசு

Subscribe to Oneindia Tamil

ஸ்டாக்ஹோம்:

இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 அமெரிக்க அணு விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட மருத்துவத்துக்கான நோபல் பரிசையும் இரு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தான் தட்டிச்சென்றனர்.

இந் நிலையில் அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள டேவிட் கிராஸ், டேவிட் பொலிட்சர், பிராங்க் வில்செக்ஆகியோருக்கு 2004ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அணுவின் கருவான நியூக்ளியசின் புரோட்டான் மற்றும் நியூட்ரான் ஆகியவற்றுக்குள் உள்ள குவார்க் எனப்படும்நுண்துகள்களுக்கு இடையிலான ஆற்றல் (ஸ்ட்ராங்க் போர்ஸ் அல்லது கலர் போர்ஸ்) குறித்து இவர்கள்ஆராய்ச்சிகள் கொண்டுள்ளனர்.

1973ம் ஆண்டில் Quantum chromodynamicsஎன்ற தியரி உருவாக இவர்களது கண்டுபிடிப்புகள் தான்அடிப்படைக் காரணமாக இருந்தன. மூவருமே கலிபோர்னியாவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பமையத்தின் ஆராய்ச்சியாளர்களாவர்.

சூரியனின் ஒளி உற்பத்தி, மின் காந்த சக்தி ஆகியவற்றுக்கான காரணத்தை இந்த தியரியை வைத்தே விளக்கிவருகிறது அறிவியல் உலகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+