கொலை: பாமக எம்எல்ஏவின் முன் ஜாமீன் தள்ளுபடி
கடலூர்:
கடலூர் அதிமுக பிரமுகர் வெங்கடேசன் கொலை வழக்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் பண்ருட்டி எம்.எல்.ஏ.வேல்முருகன் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி வெங்கடேசன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் எம்.எல்.ஏ.வேல்ருகன், அவரது தம்பிகள் திருமாவளவன், கண்ணன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாகசேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களைக் கைது செய்வதில் கடலூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரேம் குமார் தீவிரமாக உள்ளார்.ஆனால், வேல்முருகன் தலைமறைவாக இருந்து வருகிறார். இவரை பா.ம.க. காப்பாற்றி வருவதாக காவல்துறைகூறுகிறது.
இந் நிலையில் வேல்முருகன் டெல்லியில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை சந்தித்து கடலூர் காவல்துறைக்கண்காணிப்பாளர் மீது புகார் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே வேல்முருகனின் முன் ஜாமீன் மனு நிராகக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடக்க கட்டத்தில்இருப்பதால் தற்போது முன் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி வேல்முருகன் மற்றும் 8 பேரின் மனுக்களைநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதையடுத்து வேல்முருகன் மீது காவல்துறையினர் எந்த நேரமும் நடவடிக்கையில் இறங்கலாம் என்றுகூறப்படுகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் பாமகவினர் ரகளையில் இறங்கக் கூடும் என்பதால் பரபரப்பானசூழ்நிலை நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications