டி.ஆர். பாலு தொகுதி திட்டங்கள்: அரசு விளக்கம்
சென்னை:
மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஒதுக்கிய தொகுதி வளர்ச்சி நிதியின் கீழான திட்டங்கள் முறையாகஅமல்படுத்தப்பட்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தாம்பரம் தொகுதியில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற பாலு நிதி ஒதுக்கியும் அத் திட்டங்களை தமிழக அரசுஅமல்படுத்தாமல் இருந்து வருவதாக அத் தொகுதியின் திமுக எம்.எல்.ஏவான மீ. வைத்தியலிங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில், மக்கள் நலத் திட்டங்களுக்காக பாலு ஒதுக்கிய நிதியை சென்னை மாநகராட்சி, சென்னை போக்குவரத்துறை,காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஆகியவை பயன்படுத்த முன் வரவில்லை. இத் திட்டங்கள் நிறைவேறினால்பாலுவுக்கு மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கும் என்பதால் மாநில அரசு பணிகளை மேற்கொள்ள மறுத்து வருகிறது.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர், காஞ்சிபுரம் கலெக்டருக்கு பலமுறை கடிதஙகள் அனுப்பியும் பதில் கூடவரவில்லை.
அடையார் காந்தி நகரில் பஸ் நிலையம் கட்ட தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ. 40 லட்சத்தைபோக்குவரத்துறைக்கு ஒதுக்குமாறு மாநகராட்சிக்கு டி.ஆர். பாலு பரிந்துரைத்தார். ஆனால், அதை மாநகராட்சியும்ஒதுக்கவில்லை. போக்குவரத்துத்துறையும் கேட்கவில்லை.
பாலு ஒதுக்கிய நிதியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக சைதாப்பேட்டையில் பொது கல்யாணமண்டபத்தை அரசு 2 ஆண்டுகளாக திறக்காமல் இருந்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் கீழ் வரும் தனது தொகுதியில் 12 திட்டங்களை நிறைவேற்ற ரூ. 95.5 லட்சத்தைஒதுக்கியுள்ளார் பாலு. இத் திட்டங்களுக்கு அந்த நிதியை வழங்குமாறு பாலு எழுதிய கடிதத்தை காஞ்சிபுரம்கலெக்டர் கண்டுகொள்ளவில்லை.
இத் திட்டங்களை முறையாக நிறைவேற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு வைத்தியலிங்கம் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன், நீதிபதி சர்தார் சக்காரியா ஹூசேன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அமைச்சர் பாலு ஒதுக்கிய நிதியின் கீழானதிட்டங்கள் அனைத்தையும் மாநில அரசு அமலாக்கி வருகிறது. எல்லா பணிகளும் 2 மாதத்தில் முடிவடைந்துவிடும்என்றார்.
அரசின் இந்த வாதத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வைத்தியலிங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications