அறிவியல் கண்காட்சியில் விபத்து: மாணவன் பலி
சேலம்:
சேலம் தனியார் மேல் நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சாணஎரிவாயுக் கலம் வெடித்துச் சிதறியதில் அதைத் தயாரித்த மாணவர் உடல் சிதறி பலியானார்.
சூரமங்கலம் பகுதியில் உள்ள நீலாம்பாள் சுப்ரமணியம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று முதல் ஒரு வாரகாலத்திற்கு அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சேலத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது தயாரிப்புகளை இங்கு காட்சிக்குவைத்துள்ளனர். கண்காட்சி நடக்கும் பள்ளியைச் சேர்ந்த பிளஸ்டூ மாணவர்களான கலையரசன், கண்ணன்ஆகியோர் தார் டின்னில் சாண எரிவாயு கலத்தை (Bio gas cylinder) தயாரித்து காட்சிக்கு வைத்தனர்.
சாண எரிவாயுவைக் கொண்டு அடுப்பு எரிப்பது எப்படி என்ற செய்முறை விளக்கத்தைக் காட்ட இருந்தனர்.
இன்று காலை கண்காட்சி தொடங்குவதற்கு முன் ஒரு முறை, சாண எரிவாயு கலத்தை இயக்கிப் பார்க்க முடிவுசெய்து அடுப்பை பற்ற வைத்தனர். அப்போது எரிவாயு கலம் வெடித்துச் சிதறியது.
இதில் இரு மாணவர்களும் தூக்கி வீசப்பட்டனர். இவர்களில் கண்ணன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயேபரிதாபமாக பலியானார். மாணவர் கலையரசன் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், பள்ளி முன் கூடி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். பள்ளிநிர்வாகம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காததால் தான் இச் சம்பவம் நடந்ததாக அவர்கள் புகார்கூறியுள்ளனர்.
எரிவாயுக் கலத்தின் அழுத்தம் தாங்கும் சக்தியையும் மீறி அளவுக்கு அதிகமான மீதேன் வாயு சாணத்தில் இருந்துஉற்பத்தியானதாகத் தெரிகிறது. வாயுவின் அழுத்தத்தை அளவிடுவதற்கான கருவி ஏதும் கலத்தில்பொறுத்தப்படவில்லை. இதனால் தான் அது வெடித்து சிதறியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து பள்ளியின் தலைமையாசிரியர் கோவிந்தன், துணை தலைமையாசிரியர் தங்கராஜன், கண்காட்சிஒருங்கிணைப்பாளரும், வேதியல் ஆசிரியருமான முருகேசன் ஆகியோரை பள்ளபட்டி போலீஸார் கைதுசெய்தனர்.
இனி பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடத்தவேண்டுமெனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் அனுமதிபெற்றே நடத்த வேண்டும் என்றும், இந்த விபத்து குறித்து விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும்சேலம் மாவட்ட ஆட்சியர் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.
ஜெ. இரங்கல், நிதியுதவி:
இதற்கிடையே மரணமடைந்த மாணவனின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவரது குடும்பத்திற்கு ரூ.50,000 நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.
மேலும் காயமடைந்த கலையரசனின் சிகிச்சை அளிப்பதற்காக ரூ.15,000 நிதி உதவியும் வழங்க மாவட்ட ஆட்சியருக்குஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications