பாமக எம்.எல்.ஏவை பிடிக்க தனிப்படை

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

பண்ருட்டி பாமக எம்.எல்.ஏ. வேல்முருகனையும், அவரது சகோதரர்களையும் கைது செய்வதற்கு நெய்வேலிடி.எஸ்.பி. தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்துக் கவுன்சிலர் வெங்கடேசன் என்பவர் ஒருகும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முன்பு பாமகவில் இருந்த வெங்கடேசன் பின்னர் கட்சியிலிருந்துநீக்கப்பட்டதால் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர்தான் இக்கொலையை செய்திருக்க வேண்டும் என்று கூறி வெங்கடேசனின்மனைவி சரஸ்வதி குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரில் பண்ருட்டி எம்.எல்.ஏ.வேல்முருகன், அவரது தம்பிகள் திருமாவளவன், கண்ணன் ஆகியோரை முக்கிய குற்றவாளிகளாககுறிப்பிட்டிருந்தார்.

இந் நிலையில் கடலூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்த பிரேம்குமார் இந்த வழக்குக்குமுக்கியத்துவம் கொடுத்து விசாரிக்க தொடங்கினார். இதையடுத்து வன்னிய சமுதாயத்தினரிடையே பிரேம்குமார்குறித்து பாமகவினர் பிரசாரம் செய்ய ஆரம்பித்தனர்.

இருப்பினும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் பிரேம்குமார் தீவிரமாக இறங்கினார். வேல்முருகன் உள்ளிட்டோர்மீதான குற்றச்சாட்டுக்களையும், அவருக்கு எதிரான ஆதாரங்களையும், வாக்குமூலங்களையும் நீதிமன்றத்தில் பதிவுசெய்தார்.

வழக்கு தனக்கு எதிராக வலுவடையவே, வேல்முருகன் தலைமறைவானார். அவரது ஜாமீன் மனு மாவட்டசெஷன்ஸ் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. டெல்லி வரை சென்று பிரேம்குமார்மீது உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீலிடம் புகார் கொடுத்துப் பார்த்தார்.

எதுவும் பலிக்காத நிலையில் தற்போது வேல்முருகன் மற்றும் அவரது தம்பிகளைப் பிடிக்க தனிப்படைஅமைக்கப்பட்டுள்ளதாக பிரேம்குமார் கூறியுள்ளார். நெய்வேலி டி.எஸ்.பி. பெருமாள் தலைமையிலான இந்தத்தனிப்படை வேல்முருகனையும், அவரது சகோதரர்களையும் தீவிரமாக தேடி வருவதாக பிரேம்குமார்தெரிவித்துள்ளார். இதனால் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+