முத்திரைதாள் மோசடி: மாஜி அமைச்சருக்கு தொடர்பு?
சென்னை:
போலி முத்திரைத்தாள் வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் திண்டுக்கல் பெரியசாமிக்குத் தொடர்பு இருப்பதாகசென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.30,000 கோடி போலி முத்திரைத்தாள் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது.
இதுதொடர்பாக திண்டுக்கல் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்.பியான மாயத் தேவர் உயர் நீதிமன்றத்தில்தாக்கல் செய்துள்ள மனு விவரம்:
திண்டுக்கல் பெரியசாமி கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை திமுக அமைச்சரவையில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது பெரியசாமியும், அவரது பினாமிகளும் போலி முத்திரைத் தாள்களை விற்றதன் மூலம் ரூ. 250 கோடிஅளவுக்கு சொத்துக்களைக் குவித்துள்ளனர்.
பெரியசாமிக்கு நெருக்கமான திண்டுக்கல் மாவட்டப் பத்திரப் பதிவாளர் அன்பழகன், அமைச்சரின் ஏஜென்டாகசெயல்பட்டு சட்ட விரோதமாக 300 ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்துள்ளார். இதற்கான பணம் போலி முத்திரைத்தாள் விற்றதன் மூலம் வந்தது.
மேலும், 1997ம் ஆண்டு பெரியசாமி அமைச்சராக இருந்த காலத்தில், அவரது ஏஜென்டுகள் போலி முத்திரைத்தாள்களை வைத்திருந்ததற்காக திண்டுக்கல் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். ஆனால் பெரியசாமியின்தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
எனவே இது குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை நீதிபதிசொக்கலிங்கம் நாளை விசாரிக்கவுள்ளார்.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications