கூலிப்படை வைத்து வியாபாரியை கடத்திய பெண்
சென்னை:
சென்னையைச் சேர்ந்த வியாபாரி கூலிப் படை வைத்துக் கடத்தினார் ஒரு பெண்.
அந்தப் பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர். அவரால் கடத்தப்பட்ட தொழிலதிபர் பத்திரமாகமீட்கப்பட்டுள்ளார். மேலும் கூலிப் படையைச் சேர்ந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த வியாபாரி எத்திராஜ். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மோகனா என்றகந்துவட்டிப் பெண்ணிடம் ரூ. 3 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.
இந்தக் கடன் தொகையை அவர் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வந்தார். இந் நிலையில், 3 நாட்களுக்கு முன்மோகனா அவரை கூலிப் படையை வைத்துக் கடத்தினார். இது தொடர்பாக எத்திராஜின் குடும்பத்தினர் போலீஸில்புகார் செய்தனர்.
இதையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து எத்திராஜை கடத்திச் சென்ற கும்பலைத் தேடி வந்தனர். தேடுதல்வேட்டையின்போது பட்டாக் கத்திகளுடன் இந்தக் கூலிப் படையினர் ஓட்டேரி ஏரிக்கரை பகுதியில்பதுங்கியிருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீஸார் அப் பகுதியை துப்பாக்கிகளுடன் சுற்றி வளைத்து எத்திராஜை மீட்டனர். கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு அவர்கள் பயன்படுத்திய கார், செல்போன், பட்டாக்கத்திகள் ஆகிவயற்றை பறிமுதல் செய்யப்பட்டன.
கூலிப்படையை ஏவிய மோகனா தலைமறைவாகி விட்டார். அவருக்குப் போலீஸார் வலை வீசியுள்ளனர்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications