பிசிசிஐக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய நிர்வாகிகள் செயல்படுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத்தடையை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

கடந்த மாதம் செப்டம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்தல் கொல்கத்தாவில் நடந்தது. அத் தேர்தலைநடத்தும் ஆணையராக முன்னாள் நீதிபதி மோகனை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அசோக்குமார் நியமித்தார்.

இதை எதிர்த்து மறுநாளே இந்திய கிரிக்கெட் வாரியம் மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், நீதிபதிமோகன் நியமனத்துக்குத் தடை விதித்தது. வாரியத்தின் விதிகளுக்கு உட்பட்டு தேர்தலை நடத்துமாறு அறிவுறுத்தியது.

இதையடுத்து நடந்த தேர்தலில் மத்திய அமைச்சர் சரத்பவார் தோல்வி அடைந்தார். கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரன்பீர்சிங்மகேந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த நேதாஜி கிரிக்கெட் சங்கம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தது.

அந்த மனுவில் கிரிக்கெட் வாரியத்துக்கு இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்றும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்செயல்படத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இம்மனுவை விசாரித்த நீதிபதி தினகரன், நீதிபதி ரவிராஜ பாண்டியன் ஆகியோர், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் செயல்படஇடைக்காலத் தடை விதித்ததோடு, வாரியத்தின் நிர்வாகத்தை கவனிக்க இடைக்கால நிர்வாகியாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன்நியமித்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கிரிக்கெட் வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், சென்னை உயர் நீதிமன்றத்தில்அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் கிரிக்கெட் வாரியம் மீறவில்லை. எனவே உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.

மும்பையில் நீதிபதி மோகன்:

இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து நீதிபதி மோகன் இன்று மும்பை கிரிக்கெட் வாரிய அலுவலகத்திற்குவந்தார். ஆனால் அலுவலகம் மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி மோகன்,

இது எனக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நீதிமன்ற உத்தரவையடுத்து இடைக்கால நிர்வாகியாக பொறுப்பேற்க வந்தேன். ஆனால்இப்போது அலுவலகத்தை மூடிச் சென்றதன் மூலம் எனது பணியை செய்யவிடாமல் தடுக்கப்பட்டுள்ளேன் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+