40 வங்கி கணக்குகள்: இளங்கோவன் தகவல்!
மதுரை:
ஜெயலட்சுமிக்கு தமிழகம் முழுவதும் மொத்தம் 40 வங்கிகளில் வெவ்வேறு பெயர்களில் கணக்கு உள்ளதாக இன்ஸ்பெக்டர் இளங்கோவன்பகீர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஜெயலட்சுமி வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில், ஜெயலட்சுமியின் குடும்பத்தினரைக் கடத்திய வழக்கில் நீதிமன்றத்தில்சரணடைந்து தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திடீர் நகர் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் பல்வேறு பரபரப்புதகவல்களை வெளியிட்டுள்ளார்.
தனது வழக்கறிஞர் காந்தி மூலமாக இளங்கோவனின் எடுத்துவிட்டுள்ள விவரங்கள்:
மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள கனரா வங்கியில் இளங்கோவன்தான் தனக்கு கணக்கு ஆரம்பித்து தந்ததாக ஜெயலட்சுமி கூறியுள்ளார்.ஆனால் இங்கு மட்டும் அவருக்கு கணக்கு இல்லை. தமிழகம் முழுவதும் 40 வங்கிகளில் அவர் கணக்கு வைத்துள்ளார்.
ஜெயலட்சுமி என்ற பெயர் தவிர உமா, ஜமீலா என பல பெயர்களில் அவரது வங்கிக் கணக்குகள் உள்ளன. இதற்கான ஆதாரங்கள்எங்களிடம் உள்ளது. அதை சிபிஐயிடம் நாங்கள் கொடுப்போம்.
இதுதவிர கடந்த 5 ஆண்டுகளில் 15 ஊர்களுக்குச் சென்று வெவ்வேறு வீடுகளில் ஜெயலட்சுமி தங்கியுள்ளார். ஒரு பெண் எதற்காகஇத்தனை ஊர்களுக்குச் செல்ல வேண்டும்? எதற்காக அடிக்கடி வீடுகளை மாற்ற வேண்டும்? ஊர் ஊராக வங்கிக் கணக்குகளைதுவக்குவதற்கான அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications